40
அப்பாவிடம் அடங்கிக் கிடந்தாள் பத்மினி.
மாரிஸ் மைனரில் ஏறிக்கொண்ட வள்ளிநாயகம் மைனர் போல ‘ஜம்’ மென்றிருந்தார். காற்றில் அல்லாடிய நரை முடி நடுங்கிக் கொண்டிருந்தது.
“கொளந்தே பத்திரம். பதனமா ஏறு:”
கார் புறப்பட ஆயத்தப்பட்ட வேளையில், “அம்மோவ்!” என்று கூப்பாடு பரப்பியபடி ஓடோடி வந்தான் வாண்டுப்பயல் ஒருவன். அவனுக்குப் பெயர் இல்லாமல் இருக்குமா?-மணி.
விசுக்கென்று புறப்பட்டது கார்.
“இங்கே வாப்பா மணி!” என்று தேறுதல் கூறிய குரல் மட்டும் பாமாவின் கெஞ்சடியினின்றும் எழுந்தது.
ஆறுதல் சொன்னவள் வேலைக்காரி.
★★★
பாமாவின் இதயத்தில் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த குருதி வெள்ளம் விழி வழியே கண்ணீர்ப் புனலாக வெளியேறிக் கொண்டிருந்தது. சிந்திய துளிகள் பங்கு பிரிந்தன. சில பத்மினியின் மேனியில் தஞ்சம் புகுந்தன. மிஞ்சியவை மணிப்பயலின் கண்களில் தஞ்சம் புகுந்தன.
கருக்கல் பொழுது கழிந்தது.
பாமா துயில் நீத்தாள்; அதாவது, படுக்கையிலிருந்து எழுந்தாள். அவள் பார்வை, நேரெதிரில் காட்சியளித்த பள்ளியறையில் வட்டம் கிழித்தது. பட்டு மெத்தை விரித்தது விரித்தபடியே இருந்தது. ‘வெல் வெட்’ தலையணைகள் வைத்த இடத்தைவிட்டு அசையவில்லை.