45
பாமா தன் கையிலிருந்த கடிதத்தை மீண்டும் படிக்கலானுள்: ‘அன்புடைய கணவரின் பாத கமலங் களுக்கு ஆயிரம் ஆயிரம் நமஸ்காரம் செய்து அடியாள் பாமா எழுதுவதாவது. நான் உங்கள் உப்பை தின்றிருக் கிறேன். மறக்கமாட்டேன். உங்களுக்குரிய செல்வங் களே-நீங்கள் எனக்காகச் செய்துபோட்ட நகைகட்டுக் களே அப்படியே பீரோவில் பூட்டி வைத்திருக்கிறேன். எனக்குச் சொந்தமான இரு செல்வங்களை மட்டும் என்னுடன் எடுத்துச் செல்ல வேண்டியவளாகிறேன். வேறு வழியில்லை. மன்னிக்கவும். நான் பெற்ற மணியும் பத்மினியும் எனக்கு ஒன்றுதான். ஆனல் நீங்கள் மணியை வெறுக்கும்போது, அந்தத் துன்பம் என்னைச் சாகடித்து விடுகிறதென்பதை நீங்கள் ஏன் அறியப் போகிறீர்கள்? போய் வருகிறேன்.
- - இப்படிக்கு,
அபாக்கியவதி பாமா.”
密 葵 蠍
இருள் கண்களை விருட்டி விருட்டி விழித்தது.
பாமா உயிரைக் கையில் பிடித்தபடி கடந்தாள். தோளில் கைக் குழந்தை; மணி உடன் தொடர்ந்தான். அவள் மனத்தில் பயம் செறிந்த ஏதேதோ கினேவுகள் படம் எடுத்து ஆடின. தன்னை ஆசை காட்டி ஏமாற்றிச் சென்ற நாடிமுத்துவைத் தேடிச்சென்று பழி வாங்கத் துடித்தாள் ஒரு கணம்; மணியைப் பிரிந்துவிட எத் தனித்த வள்ளிநாயகத்தை வஞ்சம் தீர்க்க எண்ணினுள் மறு கணம். பாமாவின் இருமனம் அலேக்கழித்துக் கொண்டிருந்த நேரங்கெட்ட கேரத்திலே, அவளுக்குச் சுமையாகக் காட்சியளித்த பொறுப் புணர்ச்சியையும்