46
அவள் மறந்தாளில்லை அந்தப் பொறுப்புணர்ச்சிக்கும் பெயர்கள் உண்டு. ஆம், அவை: பத்மினியும் மணியும் தாம்! சுமை எனில், அன்புச் சுமை. எடை கடந்தது!
கோடம்பாக்கம் கோடிப் பகுதியும் கழிந்தது.
"நில்லு அப்படியே!" என்ற அதிகாரக் குரல் கேட்டது.
பாமா மருண்டு போனாள்.
‘குறுக்கும் மறுக்குமாக’ப் பாய்ந்து வந்து நின்ற இரு கார்களினின்றும் இறங்கினார்கள், நாடிமுத்துவும், வள்ளிநாயகமும்.
நாடிமுத்து தனக்குச் சொந்தமான மணியைப் பிடித்துக் கொண்டான்.
வள்ளிநாயகம் பத்மினியைப் பறித்துக்கொண்டான்; குழந்தை பத்மினி தந்தையின் சிரிப்பில் அழத்தொடங்கினாள்.
பாமா 'ஓ!" வென்று அலறினாள். 'எங்கே என்னோட மணியும் பத்மினியும்?'
***
“அம்மா!...” என்று ஓட்டமாக ஓடி வந்தாள் வேலைக்காரி.
பாமா ஓர் அரை வினாடி திகைப்பெய்தினாள். சுற்றிச் சூழ விழி அமைத்தாள். இரு செல்வங்களையும் மாறி மாறி முத்தமிட்டாள். 'நல்ல வேளை, நான் பிழைச்சேன், தெய்வம் காப்பாத்திச்சு!’-தாய் மனம் நன்றி உரைத்ததோ?
"கனாக் கண்டீங்களா அம்மா?”