இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை
உள்ளத்தைத் தொட்டு உணர்ச்சியைத் தூண்டி விடுபவைகள்தாம் சிறுகதைகள். கதைகளின் கரு அதாவது மையப்புள்ளி அமைவதிலும் அமைக்கப்படுவதிலும் தான் சிறு கதைகளின் ஜீவன் உருவாகிறது.
ஜீவனை உருவாக்குவது என்ற முறையிலே ஆசிரியர் பூவை. எஸ். ஆறுமுகம் கைதேர்ந்தவர். அதன் பாணியிலே தனக்கென ஒரு வழி அமைத்துக் கொண்டவர்.
அவருடைய கதைகளைப் படிக்கும்போது காணுகின்ற காட்சிகள் நம் சொந்த வாழ்க்கையிலே என்றாே ஒரு நாள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நிகழ்ந்து விட்டிருப்பது போன்ற ஒரு உணர்வு தட்டுவதுண்டு. அதுதான் அவரின் கதைகளுக்கான சிறப்பு.
அப்படிப்பட்ட கதைகளை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.
அவருக்கு நன்றி.
—பதிப்பகத்தார்