இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
"என்ன செல்லி? ...”
"அம்மா, உங்களையும் பத்மினிப் பாப்பாவையும் காணாமப் பைத்தியம் பிடிச்சிடப் போகுதுங்க ஐயாவுக்கு!"
“செல்லி, எனக்கும் அவரோட வேதனை புரியாமல் இல்லே, ஆனா, என்னோட மனசை-பத்துப் பத்து மாசம் சுமந்து ரெண்டு செல்வங்களையும் பெற்ற தாய் மனசை அவராலே ஒரே சீரா எடைபோட முடியலையே? என் மகன் மணிக்கு என்னிக்கு அவர் உண்மையான அப்பாவாக இருக்கிறதுக்குப் பக்குவப்படுகிறாரோ, அதுவரை அவருக்காக அவரோட நகை நட்டோட நான் காத்துக்கிடப்பேன், செல்லி!”
தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் புறப்பட்டது!