தந்தையும் மகளும்
தபால்கார பழனியாண்டி நீட்டிச் சென்ற கார்டை வாசித்து முடிப்பதற்குள் பார்வதியின் உடல் பூகம்மானது; முகம் வியர்வைக் குளமானது. நிமிஷங்கள் அப்புறம் பத்துக்குமேல் தாண்டி விட்டன. இன்னும் அவள் நிலையில் தெளிவு பிறக்கவில்லை.
“பார்வதி...பார்வதி...!”
அழைப்பைக் கொடுத்துக்கொண்டே, அழைப்புக்குரியவளைத் தேடி வந்துவிட்டாள், அந்த அழைப்பை விடுத்தவள். நீர்த்துளிகள் உறவாடிய கடிதத்தை நுனி விரலில் ஏந்திய வண்ணம், பதுமையாக நின்ற பார்வதியைத் தோள் பற்றிக் குலுக்கினாள் மீனாட்சி. சேலைத்தலைப்பைக் கொய்து பார்வதியின் கண்ணீரைக் கொய்து விட்டாள் அவள்; பிறகு பற்றியிருந்த கார்டைப் படித்தாள்.
“அன்பு மீனாவுக்கு,
அன்று நம் பார்வதியைப் பெண் பார்த்துச் சென்ற தஞ்சாவூர் மாப்பிள்ளை பாலகிருஷ்ணன், பெண்ணைப் பிடித்து விட்டதென்றும், வருகிற தையிலேயே கல்யாணத்தை முடித்து விடலாமென்றும் சொல்கிறார், பார்வதியிடம் இந்த நல்ல சேதியைச் சொல்லி இனியா