பக்கம்:அந்தித் தாமரை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50


கிலும் சந்தோஷத்துடன் இருக்கும்படி சொல். பார்வதி யின் வாழ்வு இனி என்றென்றுமே மாறத வசந்தம்தான். தெய்வம் துணை நின்று பார்வதியின் திருமணத்தைச் சீரும் சிறப்புமாக கடத்தி அனுக்கிரகம் புரியவேண்டும்! நான் நாளே ஊர் வந்து சேருகிறேன். பிற கேரில்.

ராமசாமி”

பார்வதி, கொடுத்து வைத்தவள் அம்மா. நல்லது தண்டு யாராகிலும் கண் கலங்குவார்களா ? வாய் விட்டு ஆனந்தமாகச் சிரி, கண்னே! இனி உன் வாழ்வும் ஒரே சிரிப்புப் புராணம்தானே. கண் நிறைந்த பணக் தார டாக்டர் பையன் உன் கை பற்றப்போகிறர். எங்கே திரி கண்ணே ... சிரி!” என்று கெஞ்சினுள் மீனாட்சி, உதட்டில் கோலமிட்டிருந்த முறுவலுடன்.

பார்வதி சிரித்தாள்; சிரித்துவிட்டுக் கூடத்துப் பூஜையறைக்குள் பாதம் பதித்தாள். அருட்புன்னகை புரிந்து கொண்டிருந்த அம்பாளின் முன் அவளது கண் னிர்த்துளிகள் ஒவ்வொன்றும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தன! -

அறந்தாங்கி ஸ்டேஷனை விட்டு ரயில் இருளைப் பிளந்து கொண்டு காரைக்குடி நோக்கிப் பயனப் பட்டுக்கொண்டிருந்தது.

ஜோடியாக அணை கொடுத்திருந்த முழங்கைகளில் முகத்தைப் பதித்தவண்ணம் பார்வதி இருள் வெளிச் தன்யப் பரப்பில் லயித்திருந்தாள். கண்கள் காணிக்கை செலுத்திய மணிகள் தரையில் கிடந்த அந்த போட்டோ வின் மீது முத்துக்கோத்த மாதிரி படிந்திருந்தன. சிரித்த முகத்துடன் கோட்டும் தலைப்பாகையுமாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/52&oldid=1273070" இலிருந்து மீள்விக்கப்பட்டது