இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
56
மீண்டும் காண முடிந்ததே... அப்பா...” என்று, இன்னும் என்னவெல்லாமோ கூறத் துடித்தாள் பார்வதி.
“என் கண்ணே, பார்வதி...நீ வாழ்வு பெற்றுவிட்டாயா?... ஆஹா! இன்றுதான் எனக்கு நிம்மதி. நீயும் நானும் உன், கணவர் டாக்டர் பாலகிருஷ்ணனுக்கு என்றென்றும் கடமைப்பட்டவர்கள்... கண் கண்ட மனித தெய்வம்!” என்று கண்ணீர் மல்கக் கூறுவதைத் தவிர் பூரணலிங்கத்துக்கு வேறொன்றும் புரியவில்லை!