பக்கம்:அந்தித் தாமரை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59


சாதாரணமாகச் சொல்லி முடித்து விடக்கூடிய தொன்றல்ல. அது அவரது மனத்தை-அவரையே மாற்றியமைத்த அவரின் வாழ்வின் முலைத் திருப்பம்திரும்பு முனை !

நினைவுகள் சென்றுபோன நாட்களின் விளிம்பில் நின்று செஸ் விளையாடின.

அனறு ...

ஆஸ்பத்திரியில் ம்ெட்டர்னிட்டி வார்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு அப்பொழுதுதான் டாக்டர் குணசீலன் காற்காலியில் வந்தமர்ந்தார். அன்றைய மாலைக் குறிப் புக்களைச் சார்ட்"டில் எழுதினர், நோயாளிகளை மனத் தில் கொணர்ந்து கிறுத்திய வண்ணம்.

பகல் பிரியும்வேளை கெருங்கிக் கொண்டிருந்தது. முகத்தில் பூத்து கின்ற வியர்வை முத்துக்களைக் கைத் துண்டினல் ஒத்திட்டுவிட்டவாறு எதிரே கோக்கினர். தன் இருப்பிடத்தை மையமிட்டு அந்தப் பெரிய வராந்தாவின் இரு மருங்கிலும் விளக்குகள் எரியத் தொடங்கின; அவைகளின் அணிவகுப்பில் படுத்த படுக்கையாகக் கிடந்த நோயாளிகளின் முகங்கள் ஒரளவு புலனயின.

கணத்துக்குக் கணம் அவர் எதையோ எதிர்பார்த் துக் கொண்டிருப்பவர்போல அவரது கெஞ்சம் சலனம் காட்டி நின்றது. அதே சமயம் மேஜை மீதிருந்த டெலி போன் மணி ஒலித்தது. ரிசிவரைக் கையில் எடுத்தார். வார்த்தைகள் பேசப்பட்டன.

‘ரஞ்சனிக்கு வலி அதிகமாக இருக்கிறதா? ஏதா வது தகவல் வருமென்றுதான் காத்துக் கொண்டிருக் தேன். இதோ புறப்பட்டுவிட்டேன். பக்கத்திலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/61&oldid=1273077" இலிருந்து மீள்விக்கப்பட்டது