இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அந்தித் தாமரை
சூடாமணி ஆடினாள். கஞ்சமலர்ப் பாதங்கள் ‘ஜல், ஜல்’ என்று சத்தமிட்டன. தாளக்கட்டும் நடன பாவங்களும் உயிர் உறவு கொண்டாடின. ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை ஆகியோர் ஒன்று கூடினர். அரங்க மேடை விண்ணில் பறந்தது.
“ஆஹா!” என்றாள் ருக்மிணி. புருவங்களின் கரையில் பனித் திவலைகள் வேலிக்கட்டி நிற்கின்றன.
“அம்மா!”
எதிர்த்து வந்தது குரல்.
சிலிர்த்தெழுந்தது அவள் பேதை மனம்.
“மணி!”
“அம்மா கனவு கினவு கண்டியா?”
“உம்...”
“என்ன கனவு அம்மா அது?”
“என் சூடா டான்ஸ் ஆடற மாதிரி கனவு.”
“நிஜமாவா?”
“ஆமாம்.”
“சரி, ரெட்டைச் சடை போட்டுப் பின்னிவிடம்மா; ஜல்தி, சீக்கிரம் ஆகட்டும். ஆண்டு விழாவுக்கு ரொம்ப
அந்தி-1