இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
70
மல்லவா...? என்று உணர்ச்சி வசப்பட்டவளாகக் கூறி நிறுத்தினாள்.
அவளுடைய இதயத்தின் இதயமாக ஒலித்த அவ்வார்த்தைகள் குணசீலனுக்குப் புதிராகப் பட்டன. குனிந்து பார்த்தார் குழந்தையை. தன் சாயலைக் கண்டார் குழந்தையிடம். சிருஷ்டியின் புதிரும் அவரை மலைக்கச் செய்தது.
குணசீலனும் ஜயந்தியும் ஒருவரையொருவர் பார்த்தது பார்த்த வண்ணம் எவ்வளவு நாழிகை நின்று கொண்டிருந்தார்களோ?
இரு ஜோடி விழிகளின் வெள்ளம் புதுப் புனலாகத் தரையில் முத்தமிட்டுக் கிடந்தது!