73
மாற்றி மாற்றிக் கூப்பிட்டார் அவர். போதாதா? தித்திப்புக்குப் பறந்துவரும் சிட்டுகளைப்போல, அக் குழந்தைகள் ஓடோடி வந்து மெத்தையில் ஆளுக்கோர் இடமாகக் கைப்பற்றிக் கொண்டன. அன்பை ஆரத் தழுவியது பாசம்: -
“தாத்தா!’
‘ஏம்ப்பா!’
‘ஒனக்கு உடம்பு சரியில்லையாமே ? அம்மா சொன்னங்களே?’
‘ம்..ம்...’
“ஆத்தாளுக்குத் தந்தி குடுத்தாகளாம் கம்ப அம் மான்!”
‘அப்பிடியா?” “எனக்குக் காச்சல் வந்தாக்க, உடனவே போயி டுமே! உனக்கும் அதுமாதிரி போயிடாதா, தாத்தா?” ‘கான் என்னத்தைக் கண்டேம்ப்பா? எல்லாம் அம்மையப்பன் கடாட்சம்!”
“நீ இனிமே ரொம்ப நாள் இருக்க மாட்டியாம்! அம்மா, சின்னம்மா, அக்கா எல்லாரும் குசு குசுன்னு பேசிக்கிட்டாங்க! நீ செத்துப் போயிட்டா, காங்க எல் லாரும் அழுவோம்... ஆமா!’
செட்டியாரின் வெளுத்துக்கிடந்த மூக்கின் முனே யில் ஈரம் சொட்டியது. மார்பு வெடித்துவிடத் துடித் தது, கையை வைத்து அழுத்திக் கொண்டார். வாய் விட்டுச் செருமினர். தம்மைக் காத்துக் கொள்ளக்கூட வில் இலயோ? “.. சுந்தரம் வந்தான். தலைமகன்.
குழந்தைகள் அம்பு கண்ட புருக் கும்பலாகத் திக்குக்குத் திக்கு பிரிந்தன.