பக்கம்:அந்தித் தாமரை.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

தெரியும், நான் பைசா பைசாவாய்ப் பணம் சேர்த்த கதை!... ஜப்பான்காரன் குண்டுபோடப் போக. நான் ‘மோல்மீன்’ நகர மரக்கடையை விட்டுக் கடலே கதியின்னு பறந்து வந்தது உனக்கே அத்துபடியாயிருக்கும். ஆக, நீ வீணாச் செலவு செஞ்சுப்பிடாதே! உன் கூடப் பிறந்த தங்கச்சிமார்களுக்கும் தம்பிமார்களுக்கும் சரியாப்பாகம் குடுத்திடுவே நீ, சட்டம் போட்டுப்பிட்டாங்க. இத்தனை பெரிய குடும்பத்தை விட்டுப்பிட்டு நான்தான் இன்னிக்கோ நாளைக்கோ போகப் போறேன்!”-விம்மியழுதார் செட்டியார்.

சுந்தரமும் வள்ளியம்மையும் வாய்விட்டுத் தேம்பினார்கள்.

டாக்டர் வந்து சோதனை செய்தார்.

செட்டியாரின் உறவினர் பள்ளத்துாரிலிருந்து வந்தார். வந்தவர் புறப்பட்டபோது சொல்லிச்சென்ற புத்திமதி: “நீங்க என்னங்கிறேன், மச்சான்? கிழம் எப்போ போகப் போகுதின்னு எல்லாரும் காத்துக்கிட்டிருக்காங்க. நீங்க கடைசி காலத்திலே உங்களுக்குத் தேவைப்படுறதை யெல்லாம் சாப்பிடுறதுதானே? நீங்க சம்பாதிச்சதுதான் சகலமும்; உங்களுக்கு இல்லாமையா? சும்மா சாப்பிடுங்க! நம்ப கோடி விட்டு ‘கூனாமான’ இல்லே, கடைசி காலத்திலே எப்பிடி எப்பிடியெல்லாம் தின்னு தீர்த்து ஆட்டம் போட்டாக! ஐய! இந்தப் பழசையா இடுப்பிலே கட்டியிருக்கீக? நாலு கெண்டை வேட்டி வாங்கி வச்சுக்கிடப்பிடாதா? உங்கபணம் தானே? சும்மா வேணுங்கிறதைச் சாப்பிடுங்க! உங்க பணம் நாளைக்கு உங்க பின்னாடியா வரப்போகுதுங்கிறேன், மச்சான்...?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/79&oldid=1315812" இலிருந்து மீள்விக்கப்பட்டது