இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
83
உண்மையான ஒரு புதல்வனாக நடித்திருந்தால்-நடந்திருந்தால் என் அன்புத் தந்தையை நல்ல படியாகக் காப்பாற்றித் தந்திருக்க முடியுமே? என் தகப்பனாரின் பணத்தில் எனக்கில்லாத அக்கறை உங்களுக்கு ஏன்? உங்கள் நாடகம் என்னை நரக லோகத்திற்கு அனுப்பிவிடும் போலிருக்கிறதே?... ஐயோ...தெய்வமே ...!"
சுந்தரம் ஆத்திரம் சுழித்திடக் கதறிக் கொண்டிருந்த வேளையில், அவனது சகோதரி ஓலம் பரப்பியவாறு ஓட்டமாக ஓடி வந்தாள்.
நாகப்பச் செட்டியார் கொடுத்து வைத்தவர் !...