பக்கம்:அந்தித் தாமரை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90


கையில் அடியெடுத்து வைத்தாள். அதிருஷ்டம் அவளே ஒருவகையில் கடைக்கண்பார்த்தது. பணக்கார வக்கீல் ஒருவருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டாள் திருச்சியில். இல்லறவாழ்வு அவள்வசம் இருபது ஆண்டு அனுபவத்தை அளித்தது. அதற்குள் அவள் விதவைக் கோலம் பூண்டாள். தன் ஒரே மகள் களினுதான் எல்லாமாக கிழலாடினுள். ஆணுல் காக ற்றி மட்டும் அப்புறம் அவள் காதுகளில் எந்தத் தாக்கலும் விழவில்லை. ஏளுே அதைப்பற்றி அக்கறைப்படக்கூட மனம் இடம் தர ஒப்பவில்லை. இப்படிப்பட்ட இக்கட்டான கிலேயில்தான் அந்தப் புத் தகம்-அவளுக்குத் தன் அத்தானுல் என்றாே அன்பளிப் புச்செய்யப்பட்டுப் பிறகு விதி வசத்தால் கை மாறிய அதே புத்தகம் கல்யாணியின் கண்களில் அன்று பட்டு விட்டது. அப்போதைய அவள் உள்ளத்தை யார்தான் அறிய முடியும்...? வாழ்வே அறியக்கூடாத தொன்றுதானே...!

---

ரேடியோவில் அதுதான் கடைசி நிகழ்ச்சி. இசைத்தட்டு சங்கீதம் கடந்து கொண்டிருந்தது.

படுக்கையில் சோர்ந்து சாய்ந்திருந்தாள் கல்யாணி. அவள்மனம் அலைகடலாகக் கொந்தளித்துக் கொண்’ டிருந்தது. மகளே எண்ணினுள். களின ஆழ்ந்த கித்திரை வசப்பட்டிருந்தாள். அவள் இதழ்கள் முறுவல் கீற்றை உருவாக்கிக் கொண்டிருந்தன. ஆசைக்கனவு ஒன்றை அவள் கண்டிருக்க வேண்டும்.

கய்யாணிக்கு கேற்றுப் பார்த்த தாகூரின் அந்தப் புத்தகம் கினைவு வந்தது. அவள் மெல்ல எழுந்தாள். களினவின் அறை அது. மேஜைமீது ஒட்டப்படாமல், ஆனல் தபாலில் சேர்ப்பதற்குரிய ஆயத்தங்களுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/92&oldid=1273098" இலிருந்து மீள்விக்கப்பட்டது