பக்கம்:அந்தித் தாமரை.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92


புதையுண்ட கடந்த காலக் கனவுகளை எண்ணிணாள் கல்யாணி; திடுதிடுப்பென்று சொல்லாமல் கொள்ளாமல் அறுந்துவிட்ட தனக்கும் தன் அத்தான் நாகராஜனுக்குமுள்ள பாசத்தை எண்ணிணாள்.மின்னாமல் முழங்கிவிட்ட இடி தன்வாழ்வை நீறுபூத்த நெறுப்பாக்கிவிட்டதை அவள் மறப்பது எப்படி? வெண்ணெய் திரண்டு வருகையில் தாழி உடைந்த கதையாகத் தன்னைக் கைவிட்ட தன் அத்தானின் வஞ்சனை அவளை நெருப்பாகச் சுட்டு விட, அந்நிகழ்ச்சி அவள் நெஞ்சத்தில் அணையாத் தீயாகப்புகைந்து வருவதை அவள் எப்படிக் கட்டுப்படுத்துவாள்?

துவளும்கொடி, வெய்யிலில் வாடி வதங்குவது போல நளினா ஆனாள்.

“அம்மா, நானே உன்னிடம் சொல்ல வேண்டுமென்றிருந்தேன். என்னை மாப்பிள்ளை யாரும் வந்து பார்த்து என் கல்யாணத்தை செட்டில் பண்ணவேண்டிய ஜோலியே இல்லை. நானே எனக்குரியவரை வரித்து விட்டேன். நமக்கு நெருங்கிய உறவினர். பெயர் சேகரன். அவர்கூட இன்று நாளை வருகிறார். அவர் யார் தெரியுமா? உன் அத்தான் நாகராஜனுடைய ஏக புதல்வன். பிரிந்துவிட்ட நம் குடும்பங்கள் இணைந்து வாழ வேண்டுமென்பதே சேகரனின் தந்தையின் ஆசையாம். இதைப் பலமுறை சொல்லியிருக்கிறாராம். அம்மா எங்கள் ஒன்றான உள்ளங்களைப் பிரித்துவிடாதே...’ என்று நளினா சொல்லும்போதே குறுக்கிட்டாள் கல்யாணி.

‘போதும் நிறுத்து, நளினா பழைய ராமாயணம் இனி எதற்கு? இழந்த உறவு இனி என்றுமே புத்துயிர் காண முடியாது. உன் தந்திரம், உன் கடிதம், சேகரனின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/94&oldid=1305188" இலிருந்து மீள்விக்கப்பட்டது