பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரஞ்சனியை வைத்த கண் வாங்காமல், ரஞ்சித் அப்படியே பார்த்தது பார்த்தபடி பார்த்துக்கொண்டே இருந்தால், அவளுக்கு வெட்கம் வருவது இயற்கைதான்!

பச்சைக் கிளி வெள்ளை வாயாகப் பேசிற்று.

“ரஞ், நான்தான் உன்னேக் கூப்பிட்டேன்!”

மோகம் தழைத்துச் செழித்துக் கடைக்கண் பணிபுரியும் மோஹினிச் சிலைக்குச் சமதையாக அழகு காட்டி, அந்தம் காட்டி, அன்பையும் காட்டிப் புன்னகை சேர்த்தாள் அன்புடையாள். அவளது மஞ்சள் முகம் பொன் மஞ்சளில் பூக்கோலம் இட்டிருக்கலாம். காஞ்சிப்பட்டின் பொன்வண்ணம், அவளுடைய பொன்மேனிக்குப் பொட்டு இட்டு அழகு பார்த்திருக்கக்கூடும்.

"ரஞ்!...”

சற்றே சரிந்த குழலே எழில் கொஞ்சும் ஆருயிர் ரஞ்சனியின் மார்பகத்திலிருந்து எழில் கெஞ்ச விலக்கி விட்டபின், சிறிதாகக் கசங்கியிருந்த சோளியின் இடது புறத்துச் சரிகைக் கரைக்கட்டைச் சரிசெய்து விட்டதில் பாங்கருக்கு நிம்மதியான நிம்மதி கனிந்தது. அந்த நிம்மதியில், ரஞ்சனியின் தாவிச்சரட்டை “நிமிண்டி’ அழகு பார்த்த சாதுரியமும் சேர்த்தி.

“இனியாச்சும் சும்மா இருக்க மாட்டீங்களா, அத்தானே?” -

கண் அடித்துக் கண் சிமிட்டி, அர்த்தமுள்ள புன்னகை யைப் பொன் நகையாக்கிச் சூட்டி மகிழ்வதில் ரஞ்சித்துக்கு நாளும் பொழுதும் ஒரு களிப்பு. கண்ணன் மட்டி லுந்தான் தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருக்க வேண்டுமென்பதாக எந்த விதியும் சட்டம் படிக்கவில்லை தான்!

111