பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடலுக்கு இதமளிக்க முயற்சி செய்யும் செயற்கைக் காற்று: உள்ளத்துக்கு --- உள்ளங்களுக்கு இயற்கையாக இதமளிக்கத் தவறிவிடுவதும நடைமுறையில் உண்டு .

செவகிக் குட்டியோடு காப்பி தீர்ந்தது. சுபம்!

தாம்பூலத் தாம்பாளம் வந்தது.

செட்டிநாட்டு உருப்படி.

கோட்டையூர் மீ. சுப., திருமண நாளின்போது பரிசளித்தது அது.

புது மெருகு மாறவில்லை.

ரஞ்சித்துக்கும் சமயங்களில் இப்படி நாணம் வருவது இயல்பு!--- மணவறையில், மாலையும் கழுத்துமாக மங்களமும் மாங்கல்யமுமாகத் தம் அருகில் தொடையோடு தொடை சேர்ந்து, தோளோடு தோள் சேர்ந்து, வாத்ஸல்யமான சல்லாபக் குதூகலத்துடன் வீற்றிருக்கும் ரஞ்சனி என்னமாய் ஒரக்கண்ணால் பார்த்து எவ்வளவு அழகாகப் புன்னகை செய்கிறாள்!-தன்னுணர்வுகொண்டு, உள்ளம் கொண்டவளைப் பார்த்தபோதும் அந்த நாணத்தைக் காட்டினால், ‘ரஞ்’ நையாண்டி பண்ணமாட்டாளாக்கும: ஆனாலும், அவளும் அர்த்தப்புஷ்டியோடு பதிலுக்குப் புன்னகை செய்தது அவரை என்னவோ செய்திருக்கவேண்டும். ‘எச்எம்டி’யில் பத்துமணியைப் பொருத்தி வைத்துப் பார்த்தபோது, அவர் வெளியேற்றிய பெருமூச்சு ராத்திரி வரையிலும்கூட பெரிதாக நீண்டு விடும் போலிருந்தது இருந்திருந்தாற்போலலே, மனக்கடலில் ஆறுதல் அலையொன்று அடித்தது. மத்தியானம் ஓய்வுப்பொழுது நல்ல பொழுதாகச் சிருங்காரமாகக் கழிந்தது!---பிறந்த மேனியாகப் போதத்தையும் போதையையும் ரசனையோடு தரிசிப்பதென்பது அபூர்வமான நடப்புத்தான்!

126