பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“பாபுவைச் சாமான்யமாக நினைச்சிட்டியா, ரஞ்: அவன் தெய்வம்; அவன்தான் நம்மோட தெய்வம்”

“அப்படின்னா, அவன்-நம்ப பாபு இந்த ஜன்மத்திலே என்ன அவதாரம் எடுத்திருக்கானாம், அத்தான்?”

“ஸ்ரீராமபிரான் அவதாரமாக இருக்கலாமோ, ரஞ்சனி?”

“கிருஷ்ண பரமாத்மாவின் அவதாரமாகவும் இருக்கலாமே, அத்தான்?”

“பிரகலாதனாகக்கூட இருக்கலாம், ரஞ்...!”

“”நந்தகோபாலனாகக்கூட இருக்கலாம், அத்...!”

“பாலமுருகளுகவும் அவதரித்திருக்கக்கூடும்!”

“கூடும், கூடும்!”

“ஏன், பரசுராமர் அவதாரமாகவும்கூட இருக்கலாம் அல்லவா, ரஞ்...?”

“அ...த்......!”

ரஞ்சனி தொடர்ந்த அழைப்பிற்குத் தொடர் சேர்ப்பதற்குள்----

பாபு ஓடிவந்து தாயின் மடியில் வீழ்ந்தான்.

“பாபு, என் தெய்வமே!...எங்க தெய்வமே!...பாபு... பாபு!” என்று உணர்ச்சிப் பெருக்குடன் விளித்த அன்பு அன்னை ரஞ்சனி, தன் அன்புத் தெய்வத்தின் கன்னங்களில் மாறி மாறி-மாற்றி மாற்றி முத்தம் கொடுத்தாள்.

“அழறியா. அம்மா” என்று பதட்டச்துடன் கேட்டான் அருமைப் பிள்ளை.

146