பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாபு பார்த்துவிடப் போகிறான்!- ரஞ்சித் அச்காய் சூரர்!

பெற்ற புண்ணியவதிக்கு அழகு காட்டி அவளோடு விளையாடவும் விளையாட்டுக் காட்டவுமே இனிமேல் பாபுவுக்குப் பொழுது காணாதுதான்!

ஓ!--மகேஷ்!

"வாங்க... வாங்க," என்று வரவேற்றார் அன்புச் சீமான்.

அப்போது:

அந்தி மடந்தையின் மசக்கை தீர்ந்து, நிலவுக் கரு வளர்ச்சி அடைந்திருந்தது.

"எல்லாரும் வெளியிலே போயிட்டு வரலாம்னு சொன்னீங்க புறப்படலாமா, ரஞ்சித்?-சமயம் ஆகிக்கிட்டு இருக்குதுங்களே?"

"வாஸ்தவந்தான்; பத்து நிமிஷத்திலே புறப்பட்டால் போச்சுங்க, மகேஷ்," என்றார் ரஞ்சித்: பாபுவை நோக்கி, "பாபு ஸார், புறப்படலாமா?" என்றார்.

"நான் வர்ரெடி, ஸார்!" என்று வாய் கொள்ளாமலும், களிப்புக்கொள்ளாமலும் சிரித்தான் பாபு.

"நீதான் எவரெடி ஆச்சுதே, பாபு?"

"ஆமா, ஆமா!..."

"மாஸ்டர் பாபுவின் கூடவே நானும் பின் தொடர்ந்து மெட்ராஸிலே ஒரு 'சோஷல் ரவுண்ட்' போயிட்டு வாரதுக்கு வாய்ச்சிருக்கிறது இது தான் முதல் சந்தர்ப்பம்னு நான் நம்புறேன்; இல்லையா, பாபு?" என்று கேட்டார் மகேஷ்.

152