பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நினைவும் மறதியும்தான் கூட்டிக் கழிக்கையில், வாழ்க்கையாக உருக்காட்டுப்படலம் வாசிக்கிறதோ?

ஆப்படியென்றால்-

மறைப்பதும் வெளிப்படுத்துவதும் வாழ்க்கையாக ஆகாதா? ஆவதும் இல்லேயா?

சே!...

என்ன வாழ்க்கை!

வாழ்க்கையாம், வாழ்க்கை!...

மண்:

வெறும் மண்:

இந்த மண் வாழ்வே மண்!...

மறுபடியும் பாபு, பழனி அப்பன் ஆகிவிட்டானே?பழனி மலையிலே, சுவாமி தரிசனம் முடிந்து, திருநீறு பூசிக்கொண்டதும், அது தன்னுடைய கண்களில் தெறித்து கண்களின் கரிப்பும் எரிச்சலும் மிஞ்சியதைக் கண்ட மகேஷ், பதைத்து நெருங்கித் தன் கண்களை அன்புடன் ஊதிவிட்ட காட்சியைக் கண்ட பாபு உடனே மகேஷை நெட்டிப் பிடித்துத் தள்ளிவிட, இதன் விளைவாக, அத்தான் சினமடைந்து தன் ‘அருமைப் பாபுவை அறைந்த காட்சி படம் காட்டியது. தன்ன அவ்வளவு சுளுவிலே யாருமே ஏமாற்றிவிடவோ, அல்லது விலக்கி வைத்துவிடவோ முடியாதென்று என்ன வெல்லாமோ பேசிய பாபுவின் சொற்கள் ஒலிக்காட்சி ஆயின. பாபு, நீ என்னென்னமோ பேசுறே; ஏதேதோ கேட்கிறே!-இனியும் என்னலே உங்கிட்டேயிருந்து தப்பு முடியாதப்பா!...தப்பவே முடியாதடா!...” பரசுராமர் ஏன் அப்படிக் கபடமாகச் சிரிக்கவேண்டும்?... ‘மாங்காட்டுக் காமாட்சித் தாயே!”

184