பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரஞ்சித்தும்கூட தமது அருமைப் பெண்டாட்டியைப் போலவே அப்போது பழனி மலையிலேதான் இருந்திருக்க வேண்டும்!-"நிஜமாவே, நீங்க என்னோட சொந்த அப்பாவா இருந்திருந்தா, இப்படி வன்மத்தோடே என்னே அறைஞ்சிருக்கவே மாட்டீங்க! தரையில் கடல் அலையால் தூக்கி வீசப்பட்ட கெண்டையின் துடிப்பைக் காட்டிலும் ஒருபடி, கூடுதலாகவே அவர் துடித்தார். அப்பனே பாபு என்னோட தெய்வமே!...எங்களோட தெய்வமே! பாபுவின் அவதாரப் பிரச்னையில், தங்கள் மைந்தன் பரசுராமராகவும் அவதாரம் எடுத்திருக்கலாமே என்பதாக ரஞ்சனியிடம் சொன்ன சொற்களில், அவர் மனச்சான்று நெகிழ்ந்து தவித்தது. திரையிட்ட சுடும் நீரில் பரசுராமரின் படம் மறுபடி திரையிடப்பட்டது. 'ஈஸ்வரா!’

"ரஞ்!...கண்ணேத் துடைச்சுக்க சீக்கிரம்!”

"நீங்களும் மூஞ்சியைத் துடைச்சுக்கங்க. அத்தான்!"

இளவரசுப் பட்டம் தரித்த பாபுப்பயல் சொன்னான், சொன்னதுதான் வந்துவிட்டான்; ஒடி வந்துவிட்டான்: ஹாஸ்டலிலிருந்து கொண்டுவந்து சேர்க்கப்பட்ட பெட்டி படுக்கைச் சாமான்கள் புடைசூழ ஒடோடி வந்துவிட்டான்: அவன் கைகளிலே அந்த இரண்டு கடிதங்களும் வெகு காபந்தாகவே ஊஞ்சலாடின; ஊசலாடின.

இந்த மனிதச் சாதி, கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலிருந்து பேசிப்பேசி அப்படி என்னதான் பிரமாக மாகச் சாதித்துவிட்டதாம்?

எனவேதான், இந்த இருபதாம் நூற்றாண்டில், கடிதங்களும் பேசவேண்டியதாகிறது:

185