பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏன்?

ஏன்?

"ரஞ், அழாதேம்மா அழப்படாது; இனிமே அழுது என்ன புண்ணியம், ரஞ்...?" -ஆறுதல்;சொல்லி, ஆருயிர்த் துணைவியின் அன்புக் கண்ணிரை அன்பின் நெகிழ்வுடன் விலக்கினார் பாங்கர் ரஞ்சித்.

"நீங்களும் அழறீங்களே?... அழாதீங்க, அத்தான்!... ஆண்டவன் அழுதால், இந்த மண் பொறுக்காதுங்க!” செருமிப் பொருமியலளாக, இன்னுயிர்த் துணைவரின் அன்புக்கு ஆதர்ச வடிவம் அமைத்த விழி நீரை வழித்தாள் ரஞ்சனி-திருமதி ரஞ்சனி ரஞ்சித்.

எதுவுமே நடக்காததுமாதிரி. அவர்கள் இரண்டுபேரும் ஒரு மாற்றம் வேண்டி முகப்புக்கு வந்து, தனிமையில் ஒதுங்கினார்கள்.

அவர்கள்: ரஞ்சித்--ரஞ்சனி!

அவள் தன்னுடைய மார்பைத் திரும்பத் திரும்பத் தடவிவிட்டான்: தடவிக்கொடுத்தாள்.

வலி பொறுக்காமல் தடுமாறி, தத்தளித்து, தவித்துக் கொண்டேயிருந்த அருமைமிகு மனைவியைப் பார்க்கப் பார்க்க, அவனது பெருமைமிகு கணவருக்கு உயிர்மூச்சு நின்றுவிடும் போலிருந்தது: ரஞ்சித் தமது பங்குப் பணிக்காகத் தம்முடைய நெஞ்சகத்தை வருடிவிடலாஞர். தொட்டடுத்த வினாடியில், கைவிரல்கள் இடுப்பைத் துழாவின.

"என்ன தேடுறீங்க, அத்தான்?" என்று கேட்டாள் உரியவள்.

“மாடியிலே என்னோட காத்ரெஜ் மேஜை டிராயர் சாவியைத் தேடினேன்," என்றார் உடையவர்.

186