பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெய்யலின் சூடு சாளரத்திலே கள்ளத்தனமாய் எட்டிப் பார்த்தது.

“நந்தினிப் பெண் இன்னம் டிஃபன் சாப்பிடவில்லை தானே?” என்று கேட்டார் ரஞ்சித்.

“ஆமாங்க,” என்றாள் துணை.

“திர்க்கதரிசியாக்கும் நம்ப மகேஷ், பாப் மியூஸிக் என்றால், நந்தினிக்குப் பசிகூடத் தோணாது போலிருக்கேன்னு அவர் அன்றைக்குக் சொன்னது இன்றைக்கு நூற்றுக்கு நூறு பலித்திருக்கிறதே?”

அத்தானின் பேச்சை ஆமோதிக்கிற பாவனையில், தஞ்சாவூர்த் தலையாட்டிப் பொம்மையாக இயங்குவதோடு நின்றுவிட்டாள் ரஞ்சனி,

ரஞ்சித்துக்கு முகம் மேலும் கறுத்தது. இந்த ரஞ்சனி வாயைத் திறந்தால் என்னவாம்? அவருக்குப் பொறுக்கவில்லை. “என்னடி ஆம்மா ரஞ், நான் சொல்றது சரி தானே?” என்று ‘நிமிண்டி’ விடலானர்.

ரஞ்சனியா சுதாரித்துக்கொள்ளாமல் இருப்பவள்?---“ரொம்ப ரொம்பச் சரிதானுங்க. மகேஷ் சொல்றது பொதுவாச் சரியாத்தான் இருக்கும்னு அவர்கிட்டவே அன்றைக்கே நானும் தீர்க்கதரிசனத்தோடே சொல்லலீங்களா, அத்தான்?” என்பதாக மடக்கினாள்.

“உன்கிட்டேயிருந்து நான் எப்பவுமே தப்பமுடியாது தான்!”

“அப்படி, வாங்க வழிக்கு!”

“உன் வழிக்குத்தானே?”

“ஆமாம்; என் வழிக்கேதான்!” சொற்கள் அழுத்தமாகவும் அமர்த்தலாகவும் விழுந்தன. அவளுக்கு அவள்

34