பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உவவினால் பதனமாக ஒற்றிவிட்டார்: அப்புறம், வாயைக் குவித்து, அவள் கண்களிலே ஊதிவிட்டார்.

நடந்தது ஆவ்வளவேதான்!

மறுகணம்:

பதுங்காத புலிக்குட்டியாகப் பாய்ந்த பாபு, ஆவேசமாக மகேஷின் மார்பில் கையைக் கொடுத்து நெட்டித் தள்ளிவிட்டான்.

மகேஷ் கதி கலங்கினார்; கீழே சாயாமல் தப்பினார்; அவமானத்தால் கூனிக் குறுகி நின்றவர், நீலவானத்தை வெதுப்புடனும் விரக்தியுடனும் நோக்கினார்; அங்கே என்ன படம் ஒடியதோ? விழிகள் தளும்பி வந்தன: சமாளித்தார்.

"மகேஷ் ஸார்! நீங்க எங்க குடும்ப நண்பர் மட்டுமே தான்!”

பாபுவா இவ்வாறு பேசினான்? -

மகேஷின் உள்மனம் வெடித்துவிடும் போலிருந்தது.

ரஞ்சனி சிலை ஆனாள். ஆகவேதான், அவள் வாய் அடைத்திருக்கவேண்டும்.

"டேய், பாபு!”

ஒரே சீறலாகச் சீறித்திட்டி,பாடிவைத் தமது பற்களுக்கு இடையிலே போட்டுக் கடித்ததோடு அமைதியடையாத ரஞ்சித், ஒரே எட்டில் தாவிப் பாய்ந்து அவனுடைய பிஞ்சுக் கன்னங்களில் பளார். பளார்” என்று ஓங்கி அறைந்தார்!

பாபு அப்போது மட்டும் அசைந்தானா?-இல்லை, அசைந்து கொடுத்தானா? ஊஹஅம்! எங்கேயோ சூன்யத்தை வெறித்து நோக்கிய நிலையில் நின்றுவிட்ட ஆவன், தன் இடது கன்னத்திலே திருஷ்டி சுற்றிப் போட்டுக்

54