பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெஞ்சிக் கூத்தாடினார் பாங்கர்: "பாபு நீ என்னோட பிள்ளையாய் இருந்ததாலேதான், உன்னை என்னலே அறைய முடிஞ்சுது!" என்று கதறினார்.

பாபுவா மசிபவன்?-"சேர்ந்தா, ஹாஸ்டலிலேதான் சேருவேன்: இல்லாட்டி, செத்துப் போயிடுவேன்!” வெட்டு ஒன்று, துண்டம் இரண்டாகச் சொல்லிவிட்டான்.

“ஐயையோ!" என்று ஓலமிட்டாள் ரஞ்சனி. பாபு: எங்க தெய்வமே! உன் இஷ்டப் பிரகாரம் நீ ஹாஸ்டலிலேயே சேர்ந்திடலாம். ஆளு. அசந்து மறந்துகூட நீ செத்துப் போயிடாதேப்பா!’ என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.

“ஆமாப்பா: உன்னைப் பெற்ற புன்னியவதியோட பேச்சையாச்சும் மதிச்சு நடப்பா, பாபு! விக்கலுக்கும் விம்மலுக்கும் ஊடாக, ரஞ்சித் பேசியதென்னவோ ஆச்சரியம்தான்!

விதியைப் போலவே, அச்சுக்குல்ேயாமல் மறுபடியும் சிரிப்பதற்குப் பாபுவால் எப்படித்தான் முடிந்ததோ?அவன் தன்னுடைய வைராக்கியப்படி, எப்படியோ ஹாஸ்டவில் சேர்ந்துவிட்டான்!-பாபு ரோஷக்காரன்!...

மணி: பதினென்று:

நெஞ்சத்திலே புரண்ட கண்ணிர் விழிகளிலும் புரளவே. சிலிர்ப்படைந்த ரஞ்சனி விழிப்பும் அடைந்தாள்: இனம் புரிந்தும், இனம் புரியாமலும் ஆட்டிப்படைத்திட்ட ஒரு பயங்கரப் பயத்தின் ஊடாக மறுபடி பாபுவை ஏறிட்டு ஊடுருவினாள். மைந்தனின் கோபமும் ஆத்திரமும் ஆதங்கமும் இன்னமும் தணியவில்லை என்பதை உணர்ந்து கொண்ட நேரத்தில், பாபு-மகேஷ் சம்பந்தப்பட்ட வேறு சில நிகழ்ச்சிகளும் இதுதான் சமயமென்று நினைவில்

56