பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படமெடுக்கத் தலைப்பட்டன. பயங்கரமான பயம் மேலும் பயங்கரமடைந்தது. நெஞ்சு வலித்தது. பாபுவைச் சமாதானப் படுத்திவிட்டால், எல்லாமே சரியாகிவிடும்; சரிப்பட்டுவிடும்!-பாவுக்குப் பசிக்கும்:- பாவம்: மெளனத் தைக் காலில் போட்டு மிதித்தவளாக, அடிமேல் அடி எடுத்து வைத்தாள். அன்புப் பிள்ளையின் பால் வழியும் வதனத்தை அன்புடன் நிமிர்த்திவிட்டாள்; பாபு, முன்னேயெல்லாம் நீ வர்ரதுக்குத் தாமதமானல், அப்பவே ஹாஸ்டலுக்கு ஃபோன்’ பண்ணி விசாரிக்கலையா? என்னமோ, இன்னிக்குத் தவறிட்டேன்!-தப்புத்தான்! உன் அப்பாவை நீ மன்னிச்சிருக்க, உன்னைப் பெற்ற அம்மாவை மட்டிலும் நீ மன்னிக்காமல் இருக்கலாமா? வாப்பா, இட்டிலி சாப்பிடலாம்,’ என்று கெஞ்சிள்ை; கொஞ்சினாள்.

பாபுவுக்குச் சிரிப்பதற்கு மறந்து போய்விட்டது: அவன் என்ன செய்வான்?- பாவும்!

டக்..டிச்.டக்.

“ டேய் பாபு என்னை மன்னிக்கிறதுக்கு உனக்கு இஷ்டம் இல்லேன்ன, உன்னுேட ஆத்திரம் தீர, இப்பவே உன் கையாலே என் கழுத்தை நெறிச்சுப் போட்டுடா!... ஊம்...ஒன்..டு.,த்ரி!’ என்று உத்தரவு போட்டாள் ரஞ்சனி.

“த்ரீ என்னும் அந்த ஆணைச் சொல் எதிரொலித்துத் தேய்வதற்குள்:

‘அம்மா!...அம்மா!...’

கதறிவிட்டான் பாபு. செருமல் தொடர, அன்னையின் கழுத்தைத் தடவித் தடவிப் பார்த்தான் அவன். தங்கக் கழுத்திலே பாம்பெனச் சுற்றிக் கிடந்த தங்கத் தாலியை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டான். நிம்மதிப்

57