பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருமூச்சுடன், தாய் வடித்துக் கொண்டிருந்த ஆனந்தக் கண்ணீரை வடித்துவிட்டான். அம்மாவின் அழகான புன்னகையைக் கண்டதும்தான் அவனுக்கும் நிம்மதி கனிந்திருக்கவேண்டும். ஏற்றிவிட்ட விழிகளைச் சற்றே தாழ்த்தியவனாக, ‘அம்மா, அம்மா!...பசிக்குதம்மா எனக்கு!’ என்று குழைந்தான்.

எனக்கும்தான்,’ என்று குறுக்கிட்டாள் நந்தினி.

‘எனக்கும் கூடத்தான்!” என்று பெருமிதத்தோடு சிரித்தான் ரஞ்சனி.

“எங்கேம்மா உனக்குப் பசிக்குது?-நான் பத்துமாசம் குடியிருந்தேனே, இங்கேதானே? என்று விசாரணை நடத்திய சூட்டோடு சூடாக, தாயின் மணி வயிற்றிலே “கிசு, கிக மூட்டினான் குறும்புப் பையன்,

வெட்கத்தில் பெருமை சுரந்திட, பெருமையில் மகிழ்ச்சி சுரந்து வழிகிறது.

ரஞ்சித் நல்ல மூச்சுவிட்டார்; அதோடு நிற்கவில்லை; ‘எனக்கு மாத்திரம் பசிக்காமல் இருக்குமாக்கும்?’ என்று சிரிப்பைக் காட்டாமல், கெஞ்சுதலைக் காட்டினார்.

“நீங்க முன்குடியே சாப்பிட்டாச்சுங்களே, அத்தான்?”

“உன் மகன் மட்டும் ஹாஸ்டலிலே சாப்பிட்டிருக்க மாட்டானே?”

‘நான் சாப்பிடல்லே’ என்று விடை சொன்னன்'

‘நானும் சாப்பிடல்லேதான்!” என்று அடம் பிடித் தார் பாங்கர்,

‘பொய்!. சுத்தப் பொய்!” என்று தர்க்கம் பண்ணினாள் வீட்டுத் தலைவி. இப்படியும் குதர்க்கம் பேசுவாரன்

58