பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வந்திட்டேன். வந்ததும் ஒரு விதத்திலே நல்ல தாயிட்டுதுங்க. நீங்களும் உங்க சம்சாரமும் உங்க குழந்தைங்களும் ஆள் மாற்றி ஆள் காரமாகவும் சாரமாகவும் டயலாக் பேசினதை யெல்லாம் நானும் திரை மறைவிலேருந்து ரொம்பவும் ரசித்தேனுங்க, பாங்கர் ஸார்! வாழ்க்கையை நாடகம்னு சொல்லக் கேட்டிருக்கேன்; ரிலீஸ் ஆகப்போற என் படத்திலே கூட இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கார் எங்க வசனகர்த்தா. அந்த வசனம் உண்மைதான் என்கிற உண்மையை இப்பத்தான் என்னாலே அனுபவ பூர்வ மாக உணர்ந்து கொள்ள முடிஞ்சதுங்க, எப்படியோ, எல்லாருமாய்ச் சேர்ந்து, பாபுவைச் சமதானப்படுத்திட்டிங்க. அந்த மட்டிலே, பருத்தி காஞ்சிக் கண்டாங்கியாய்க் காய்ச்சிட்ட மாதிரிதானுங்க, ஐயா! என்று சொல்லி, நாவற்பழச் சிவப்பில் இருந்த தடிமனை உதடுகளில் மெல்லி சான புன்னகையை மலரவிட்டார் கைலாசம். பாங்கா யதார்த்தமான கலகலப்போடு இல்லா ததைக் கண்டு, அவருக்கு உறுத்தல் எடுத்தது. ரஞ்சித்தின் சொந்தப் பிரச்சினையில் உரிமை எடுத்துக் கொண்டு குறுக்கிட்டதை அவர் விரும்பவில்லை போலிருக்கிறது. ஐயா,எல்லாருமாகச் சாப்பிடுங்க; டிபன் வேளையிலே பிச்சைக்காரனாட்டம் நான் வேறே குறுக்கிட்டிட்டேன்" என்றார்.

அப்படி யெல்லாம் சொல்லப்படாதுங்க, கைலாசம். உங்க தர்ம சிந்தை எனக்குத் தெரியும்: நீங்களும் எங்க குடும்ப நண்பர் மாதிரிதான், வாங்களேன்; நீங்களும் இருக்கிற இட்டிலியை ஈவு போட்டுச் சாப்பிட்டுட்டுப் போகலாமே?

கைலாசத்துக்கு வாயெல்லாம் தங்கப்பல்; வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டார்; அது பத்திரமாகத் தப் பியதில் பரம திருப்தி; ரொம்ப நன்றிங்க. ஐயா. என் வயிற்றிலே 'கொக்கரக்கோ' ஓசை இன்னம் கூட அடங்கல் லேங்க, என்றார்.

ஓஹோ ! புஹாரி விருந்தோ ?

61