பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரஞ்சித்-ரஞ்சனி ஜோடி, ஜோடியாகவே முறுவல் பூத்தனர்.

உச்சிப் பொழுது நெருங்கிவிட்டது.

இயற்கையின் இயல்பான அன்பிற்கு வாய்த்த ஒர் உறுத்தலாக வெயில் கோயாவேசமாகக் காய்கிறது; அந்தியில் மழை வந்தாலும் வரலாம்.

மகேஷ்-ரதி ஜோடி, ஜோடி சேர்ந்தும் ஜோடி சேர்த்தும் சோபாவில் அமாந்தார்கள்.

ரஞ்சித்தும் உட்கார்ந்துகொண்டார்; நெற்றி “விண், விண்ணென்று தெறிக்கிறது. உயிர்கொண்டவளை ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்த நேரத்தில், அவரது நெஞ்சத்தின் அடியில் அனுதாபம் பொங்கி மேலெழத் தொடங்கியது: ‘பாவம், ரஞ்...!- விழிகள் எரிச்சலுடன் நிறைந்தன. பதற்றத்தோடு அன்றையச் செய்திப் பத்திரிகைத் தாளை எடுக்கின்ற பாவனையில் கண்களை மறுபுறம் திருப்பிக் கொண்டார். இனிமேல் கவலை கிடையாது. ரஞ்சனியிடம் இப்போதைக்கு நான் அகப்பட்டுக் கொள்ளவே மாட்டேன. பூவின் கிரிப்பில் அவருடைய உதடுகள் உறவாடத் தலைப்பட்டன. ‘ரஞ், நீயும் உட்காரேன்,’ என்று உபசாரம் செய்தார். அவரது உள்மனம் எதையோ நினைவுகூர்ந்து துடித்தது!-சோதனையின் விதியாக அமைந்த அந்தப் பொல்லாத மாலைப்பொழுதின் நிகழ்ச்சியை மீண்டும் எண்ணிப் பார்க்கக்கூட அவர் அஞ்சினர். எங்கேயோ சூன்யத்தை வெறுத்து நோக்கியவண்ணம் நின்ற மனைவியை உட்காரும்படி மறுபடியும் கேட்டுக்கொள்ளவும் தவறிவிட வில்லைதான்! .

இடதுகை நடுவிரலால் நெற்றியை லேசாகத் தடவிக் கொண்டே ஆற்றாமையுடன் கணவரைப் பார்வையிட்டான் ரஞ்சனி, ‘அத்தான், ! இவங்களோடே சற்று நேரம்

70