பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனா, நாங்க ரெண்டு பேரும் உங்க ரேண்டு பேரையும் அவ்வளவு சுலபமாய்த் தப்பிச்சுக்கிட விட்டுடுவோமா, என்ன?’ என்று சற்றே துர்க்கலான குரலில் பேசினார்.

மகேஷ் திகைத்தார்; முகம் மாறியது: “நடந்த நடப்பை ததி சொன்னுள்: அதனுலேதான், நானும் “ஆமாம்” போட்டேன்; எங்க வார்த்தைகளே நீங்க தம்பாமல் தவருக எடுத்துக்கிடுறதானால், நானும் சரி, ரதியும் சரி, மதுபடியும் உங்க வீட்டிலேயும் காலைப் பலகாரத்தைச் சாப்பிட்டு வைக்கிறோம், மிஸ்டர் ரஞ்சித்!’ என்று இதமான குரலில் இணக்கம் தெரிவித்தார்.

“அப்படி வாங்க என் வழிக்கு ரஞ்சனி தமாஷ் பேசினாள்; சிரித்தாள்; “நான் உங்களுக்கோசரம் ரிசர்வ் செஞ்சு வச்சிருக்கிற இட்டிலி உங்களுக்காகவே இன்னமும் காத்துக்கிட்டு இருக்குதுங்க, மகேஷ். இப்ப அந்த இட்டிவிகளை நீங்க ரெண்டு பேரும் பாகம் பிரிச்சுக்கிடலாம்; அத்தோடே ரவா உப்புமாவும் உங்களுக்குச் சூடாகக் கிடைக்கும்; ஒரு நிமிஷம், எல்லோருமாய்ப் பேசிக்கிட்டு இருங்க: இல்லே. ரேடியோவைப் போடுங்க. இதோ வந்திடுறேன். மகேஷ்,’ என்று “படபட"வென்று சொல்லிவிட்டு, இரண்டாம் கட்டைத் தாண்டி ரேழியில் மடங்கிச் சமையல் கடத்தின் உள்ளே மறைந்தாள் ரஞ்சனி.

அர்த்தமுள்ள புன்னகைப் பரிவர்த்தனையில் மூவரும் ஈடுபட்டிருந்தனர்.

வன்னிசாகப் பத்து நிமிஷங்களேத் தேயவிட்ட பிற்பாடுதான், ரஞ்சனி மீண்டாள்; அவளுக்கே உரித்தான பரபரப்புடன், அடுத்திருந்த உணவுக் கூடத்திலே சுழன்றாள்: தட்டுக்கள் தாளம் தட்டின; கரண்டிகள் சுருதி கூட்டின. பூந்திரை விலக்கிப் பூமணம் சொரித்த மதுர கீதத்தின் இனிமையில் அவள் வெகு சுறுசுறுப்பாகவே இயங்கினாள்.

72