பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"வாங்க, ரதி; நீங்களும் வந்திடுங்க, மகேஷ்!” மறு மூன்றாவது நிமிஷத்தில் அழைத்தாள்.

ரதிதான் முதலில் எழுந்தாள்.

மகேஷ் இரண்டாவதுதான்.

"நீங்களும் வாங்க, ரஞ்சித்," என்று கூப்பிட்டவர் மகேஷ்.

“கணக்குக்கு மீறி காலையிலே இட்டிலி சாப்பிட்டாச்சுங்க. இனி, வயிற்றிலே இடம் கிடையாதுங்க!" என்றார் பாங்கர்.

"விருந்துசாப்பிடுறவங்களோட, விருந்து கொடுக்கிறவங்களும் கூடமாட உட்கார்ந்து சாப்பிடுறதுதானே நம்மோட சம்பிரதாயமாக இருந்து வருது?-சும்மா வாங்க; எங்களுக்கு மட்டும் பசிக்குதா, என்ன? ரஞ்சனி கோவிச்சுப்பாங்களேன்னு தான் 'கட்சி'ப்னு எந்திருச்சிட்டோம்," என்று சொல்லி, ரஞ்சித்தின் கைகளைப் பற்றி அழைத்துச் செல்ல வேண்டியவர் ஆனார் மகேஷ்.

ரஞ்சித்துக்குத் தர்ம சங்கடமாகப் போயிற்று; ‘'நானும் வந்தாச்சு, ரஞ்!" என்று மென்று விழுங்கினார். திரிசங்கு சொர்க்கம் என்கிறார்களே, அது இப்படித்தான் இருக்குமோ? கைகளே உதறிக் கொண்டார்.

விஷமச் சிரிப்புப் பயின்றாள் ரஞ்சனி. "உங்க விருந்துக்கு நீங்க இல்லாமலா? உட்காருங்க, அத்தான்," என்று அன்பை வாரி வழங்கினாள். பிறகு விருந்தினரையும் அமரச் சொல்லி, பஞ்சு மெத்தை ஆசனங்களைச் சுட்டினாள். ‘எண்ணி நாலு இட்டிலிக்கு மேற்கொண்டுதான் நீங்க சாப்பிடுற பழக்கம் இல்லையேன்னு, உங்களுக்காக நாலே நாலு இட்டிலியை எடுத்துப் பத்திரப் படுத்தி வச்சிருந்தேன். நீங்களும் உங்க ரதியுமாய் ஆளுக்கு ரெண்டு மேனி சாப்பிடுங்க’, என்று சொல்லி குளிர்ப்பதன அறையைத்

73