பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திறத்து இட்டிலிகளைப் பங்கு வைத்து, அவரவர் தட்டுக்களில் வைத்தாள் ஆவி பறந்த ரவை உப்புமாவில் ஒவ்வொரு கரண்டி போட்டாள். தக்காளிச் சட்டினி என்றால் மகேஷாக்கு உயிரும் பிராணனும், என்ன செய்யட்டும்?- நேரமாகிவிட்டதால், இப்போது அதன் சுவை கெட்டுவிட்ட மாதிரி தோன்றியது. ஆகையால், புதினவையும் பச்சைக் கொத்தமல்லியையும் சேர்த்து வைத்து அரைத்துத் தாளித்துத் அருமையான துகையல் தயார் செய்து வைக்கச் சொல்லியிருந்தாள். எடுபிடிக் குட்டி க்கு நல்ல கைப்பதம் உண்டு. ஆகவே, துகையல் வாய்க்கு உணக்கை'யாகவே அமைந்திருந்தது. ஒரு சிட்டிகை துள் உப்பையும் தூவி, பேருக்கு இரண்டு ஸ்பூன் வீதம் போட்டாள். ஊத்துக்குளி நெய் என்றால், மகேஷ் இஷ்டப்படுவார். ஊற்றினாள்! "ரதி, இனி உங்களுக்கும் இந்த வீடு சொந்தம்தான். வெட்கப்படாமல் சாப்பிடுங்க” மனசிலாயி...?? என்றாள்.

"சரி!"

"நீங்களும் 'செரி' சொல்லுங்க," என்று கேட்டுச் கொண்டு மகேஷ் பக்கம் பார்வையைப் பரப்புகிறாள் ரஞ்சனி,

“இப்பவெல்லாம் நான் 'செரீ'ன்னு சொல்றதில்லையே ரஞ்சனி?"

பெருமையாக நகை சிந்திய கையோடு, தாலி கொடுத்த தயாளரை நாடினாள். ரஞ்சித்தின் முறை அல்லவா? ஒரு கரண்டி உப்புமாவைக் கொட்டினாள் ரஞ்சனி.

“போதும், ரஞ், போதும்! இரண்டாவது கரண்டியையும், அதாகப்பட்டது. உப்புமாவையும் நான் ஆசைப்பட்டுச் சாப்பிட்டு வச்சா, அப்பாலே, உனக்குத் தானே வீண் சிரமம்?" கையை அமர்த்தினார் தொழில் பிரமுகர்.

74