பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டெலிஃபோன் மணி நிற்கவில்லை; நிலைக்கவில்லை; இன்னமும் அடித்துக்கொண்டே யிருக்கிறது.

‘ரஞ்...!’-பாங்கருக்கு ஏனோ திகீரென்றது. சாந்தி முகூர்த்த இரவில் லயித்துச் சிலிர்த்து மெய்ம் மறந்திருந்த மனநிலையில், ஊதா டைரியின் ஏடுகளைப் புரட்டிக் குறிப்பிட்டதொரு பக்கத்தைப் பரபரப்போடு படித்துக் கொண்டிருந்தவரை, சமய சந்தர்ப்பம் புரியாமல் தொலைபேசி சோதிப்பதை அவரால் அனுமதிக்க முடியவில்.ை அந்த நாட் குறிப்பை ஊதுவத்தி மணம் தேங்கிய மேஜையின் ட்ராயரில் நிதானமாகத் திணித்து மூடிவிட்டு, பேனாவில் பொன்வண்ண மூடியைச் செருகுவதற்குள், ரஞ்சித் பதற்றம் அடைந்தார். சோதனை மிகுந்த இப்படிப்பட்ட நேரங்களிலே, அவர் ரஞ்சனியை அன்போடும் ஆவலோடும் எதிர்பார்ப்பது உண்டு. அவள் அன்புடனும் அக்கறையுடனும் உதவுவதும் உண்டுதான்!-ரஞ்சனியின் நேர்மையான சாதுர்யமும் முறையான நிதானமும் யாருக்கு வரும்?-- பெருமிதம் தாங்கவில்லை; பெருமை பிடிபடவில்லை; பெருமிதமும் பெருமையும் கலத்த புன்சிரிப்பு கண்களிலும் உதடுகளிலும் நிழலாட, அந்தரங்க அறையிலிருந்து வெளியேறி, நடைக் கூடத்தை அடைந்தார்.

கண்பொத்தி ஆட்டம் தொடர்கிறது.

தொலைபேசியின் கூப்பாடும் தொடர்கிறது.

ரஞ்சித் ரிஸீவரைக் கைப்பற்றினார;, என்னவோ ஒரு திகில்; ஏதோ ஒரு தவிப்பு; வேர்த்துக் கொட்டுகிறது. யார் அழைப்பதாம்? ஒருவேளை,. இங்கே ராமகிருஷ்ணா மிஷன் ஹாஸ்டலிலிருந்து பாபு அழைத்தாலும் அழைப்பான்! இன்றைக்கு லீவ்; ஞாயிற்றுக்கிழமை அல்லவா?

ஹபிபுல்லா சாலையிலே, நெரிசல்களும் சந்தடிகளும் வரவர அதிகமாகிவிட்டன.

6