பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெறியுடன் அழுத்தி அழுத்தித் தேய்த்துக் கொண்டார்; முகமண்டலத்தில் கவிழ்ந்த துயர மேகங்களுக்கு மத்தியில் அந்த வடு, அசிங்கமான அந்தக் கரும்புள்ளிச் சாயல், வழக்கத்தை விடவும் கூடுதலான அலைக்கழிவோடு பளிச்சிட்டது. மறு வினாடியில், பித்துக் கொண்ட நிலையில், கண்களை மூடிக் கொண்டு சிந்தனை வயப்பட்டார். எதை நினைத்தார்? எதையோ நினைத்தார்!-நேத்திரங்கள் நனைந்தன; கண்ணீரின் நிறம் சிவப்புத்தானே?- நான் புத்தி கெட்டவன்; அநியாயக்காரன், துரோகி; பாவி, ஆத்திரக்காரன்! சே! தெய்வத்தைக் கூவிக் கூப்பிட்டார்:‘தெ ... ய்...வ...மே!’’- தெய்வம் எங்கே?... எங்கே தெய்வம்?...

"மகேஷ்!"-ரஞ்சனி.

"மிஸ்டர் மகேஷ்!" என்றார் ரஞ்சித்,

ரதி: "ஆ!. என்டே மகேஷ்!"

மகேஷ் இப்பொழுதுதான் பூமிக்குத் திரும்பியிருக்கிறார். சொப்பனம் கண்டு விழித்தவராக விழித்தார்.

“ஏன் இப்படி உங்க பாட்டுக்குக் கண்ணீர் விடுறீங்க?” என்று ஆதரவாகக் கேட்டார் சீமான்: “புள்ளி'க்குக் கண்கள் கலங்கியிருந்தன.

ரஞ்சித்தைப் பரிதாபமாக ஏறிட்டுப் பார்க்கலானார் மகேஷ்.

ரஞ்சனிக்கு இப்போது நெஞ்சை என்னவோ செய்திருக்க வேண்டும்; தடவிக் கொடுத்தாள்; மெளனமான அதிர்வோடு, மகேஷின் அருகில் வந்து மெளனச் சிலையாக நின்றாள். மனப்பாம்பு ஏதேதோ நினேவுகளைப் படம் காட்டிப் படம் எடுத்தது; மகேஷின் ஒலத்திற்கான காரண காரியத்தை உணர்ந்தவள் போலவும், அதற்குத் தன்னால்

83