பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

இளவரசி வாழ்க


தந்தை அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். எவ்வளவு மறுத்தும் கேட்கவில்லை...” என்று நயந்த குரலில் விவரித்து மாலையையும் காட்டினாள்.

ஆ!..இது என் அன்னையின் மாலை ஆயிற்றே!... ஐயோ, அம்மா!... என்று உள்மனத்துள் நைந்தாள் ராஜகுமாரி. பிறகு, “நீ போகலாம் குழந்தை ஜாக்கிரதை!...”என்று எச்சரித்தனுப்பினாள்.

நாதசுரபி குழந்தைக்குக் கட்டி முத்தங்கள் ஈந்தபடி உள்ளே அடியெடுத்து வைத்தாள்.

மலைத்து நின்ற கன்யாகுமரி, ‘அப்பாவின் நடத்தையை அமைச்சர் தலைவரிடம் சொல்லி, இந்தப் பெண் நாதசுரபியை வெளியேற்றிவிட வேண்டும்!’ என்று தன்னுள் திட்டம் வகுத்தபடி, ஏதோ ஓர் உறுதியுடன் தன் மாளிகைக்கு வழி நடந்தாள்!

6

ளவரசி கனயாகுமரி, தன்னுடைய ஏகாந்த மாளிகையின் மாடி வெளியில் நின்றாள். எதிர்ப்பார்வையில் பட்டுக் கம்பீரமான லாவண்யத்துடன் காட்சியளித்த நடன மகாலையும் அதனின்றும் தனித்து ஒதுங்கியிருந்த நீதிமண்டபத்தையும் இமை மூடாமல் பார்த்துக்கொண்டேயிருந்தாள். மகாராணியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய நாட்டுக் கொடிகள் அப்போதுதான் பறக்கத் தொடங்கியிருந்தன.

விடிந்தும் விடியாத நேரம்.

அரசாங்க சாரட்டு வண்டி பிரதம அமைச்சரைச் சுமந்து வந்ததை அவள் அறிந்தாள். இவ்வளவு சீக்கிரமாக–ஐந்து நாழிப் பொழுது கூட ஆகியிராத இந்நேரத்தில் அழகண்ணல் வந்திருந்தது அவளுக்கு விசித்திரமாகத் தெரிந்தது. ‘அந்நிய நாட்டுப் படையெடுப்பின் ரகசியக் குழு கூடவிருக்கலாம்.