பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

அந்த நாய்க்குட்டி எங்கே?



அரசாங்கச் சேவகன் கூப்பாடு போட்டான்.

கூடியிருந்தவர்களின் கவனம் ஒன்று கூடியது.

சிறுவன் பூபாலன் கைதிக் கூண்டில் விலங்கும் கையுமாக கண்ணீரும் கம்பலையுமாக நின்றான். அருகே போலீஸ் ஜவான்கள் இரண்டு பேர் பாதுகாப்பிற்காக நின்றார்கள். ஒரு ஓரத்தில் பூங்கோதையின் தந்தை டைரக்டர் பரசுராம், பூங்கோதை, சர்க்கஸ்காரர் சுகுமாரன், பூபாலனின் அப்பா முருகேசன் ஆகியோர் நின்றார்கள்.

நாற்காலியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் சிந்தனைக் கோடுகள் கிழிக்கப்பட்டிருந்தன. அவருடைய கையில் அந்த வைரச் சங்கிலியும் கத்தியும் மின்னிக்கொண்டிருந்தன.

பட்டணத்துக்கு இந்த வழக்கை மாற்ற முயன்ற டைரக்டர் தோற்றார். பட்டணத்துக்கு இந்த விசாரணையை மாற்றத் தேவையில்லை என்று வாதாடிய சர்க்கஸ்காரர் வெற்றி பெற்றார்.

விசாரணை நடந்தது. இரு தரப்பு வக்கீல்களும் வாதப்பிரதிவாதங்களை முடித்துக் கொண்டார்கள்.

மாஜிஸ்திரேட்டின் கவனம் தன் மேஜை மீதிருந்த தாளில் ஓடியிருந்த எழுத்துக்களில் ஈடுபட்டிருந்தது. பூபாலனின் வாக்குமூலம் அது :

“...என் பெயர் பூபாலன். என் பிறந்த ஊர் அறந்தாங்கியிலிருக்கும் பூவைமாநகரம் என்பது. என் அப்பா பிழைப்பு காரணமாக சென்னைப் பட்டணத்துக்குப் போனார். அப்பாவுக்கு இந்த சர்க்கஸ்கார முதலாளி சுகுமாரன்தான் சிபாரிசு பண்ணி வேலையில் அமர்த்தினார். நான் சினிமாப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டதை இவர் எப்படியோ அறிந்து, தன்னுடைய சர்க்கஸ் கம்பெனியில் என்னைச் சேர்த்துவிடத் துடியாய்த் துடித்தார். எனக்கு இது கட்டோடு பிடிக்கவில்லை ஒரு நாள் என்னைத் தந்திரமாக தன்னுடைய இருப்பிடத்துக்குக் கூட்டிச் சென்றார்.