பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

43


அடுத்த நாள் பத்திரிக்கையில் தான் தப்பிய விவரத்தைப் பற்றியும், தன்னுடைய நாய் சுகுமாரனால் சுடப்பட்டு மாண்டதைப் பற்றியும் படித்த போது, அவனுக்கு மூளை குழம்பிவிட்ட துயரம் மிகுந்த நாட்களையும் அவன் மறத்தல் சாத்தியமே இல்லை!

‘என்னோட அருமை நாய்க்குட்டியைப் பிரிஞ்சு எத்தனை மாசமாயிட்டது? அது இந்நேரம் உயிரோடே இருந்திருந்தால், பெரிய நாயாக ஆகியிருக்குமே? என்று மனதிற்குள் நினைத்துப் பார்த்த பூபாலனுக்கு அழுகை வந்து விட்டது.

அப்பொழுது–

உலகத்து அதிசயங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து கை குலுக்கிக் கொண்டிருந்தன – ஆஹா பட்டணத்திற்குப் புறப்பட்டுச் சென்ற பூங்கோதையும் அவளுடைய அப்பா டைரக்டர் பரசுராமனும் அல்லவா!

உண்மைதானா–அல்லி!... அரக்கன் சர்க்கஸ் சுகுமாரின் புதல்வி!

என்ன அதிசயம்! என்று அவனைக் கைது செய்து விடுவித்த அதே எஸ்.ஐ – அறந்தாங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்!

அவன் முன் நின்று கொண்டிருந்த அத்தனை பேரிலும் பூங்கோதை முன்னாடி வந்தாள்.

“பூபாலன் அண்ணாச்சி! நாங்க இந்த ஊரை விட்டுப் பட்டணத்துக்குப் போன இரண்டு மூணு நாளுக்குள்ளே ரொம்ப ரொம்ப அதிசங்கள் நடந்து விட்டன.

சர்க்கஸ்காரன் சுகுமாரன் கள்ள நோட்டு தயாரிப்பவனாம்..! அவனுடைய அட்டூழியத்தைப் பொறுக்காமல் அல்லியே அவனைக் காட்டிக் கொடுக்க இருந்துச்சாம். அதுக்குள்ளே அவனைக் காட்டிக் கொடுத்திட்டுது அவன் கிட்டேயிருந்த ஒரு