பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பூவை எஸ். ஆறுமுகம்


 
என்னுடைய பிறந்த நாள்!.....

ன்று புதிதாய் பிறந்திருக்கின்றேன். நான்! – ஆமாம், உண்மை இது! ஆகவேதான், உடலும் உள்ளமும் புத்துயிர் பெற்றிருக்கின்றன! – இடைப்பட்ட சோதனைப் பொழுதுகள் பொய்யாகட்டும்!

என்னிடம் மெய்யான பாசமும் அன்பும் பாராட்டு நண்பர்கள், "பூவை என்றால், சோதனை என்று பொருள்" என்பார்கள். அந்நாட்களிலே அமரர் டாக்டர் ஜி. உமாபதி அவர்களின் 'உமா' இலக்கிய மாத இதழிலே நான் செய்து பார்த்த – செய்து காண்பித்த இலக்கியச் சோதனைகளை எண்ணித்தான் அவர்கள் அவ்வாறு கூறுவது வழக்கம் – பழக்கம்!

தமிழ்ப் படைப்பு இலக்கியத்தின் பெரும்பாலான துறைகளையும் என்னுடைய எழுத்துகள் தொட்டுப் பாத்திருக்கின்றன! இவ்வகையில், இதுவரை வெளிப்படுத்தப்பபட்ட நூல்களின் எண்ணிக்கை நூற்று எழுபத்தொன்பதைத் தாண்டி விட்டன! – மெய்தான்! எண்ணிப்பார்த்தால், என் மெய் சிலிர்க்கிறது!

இடைவெளியைக் கடந்து, இப்பொழுது என்னுடைய புதிய கதைத் தொகுதி ஒன்றை அண்மையில் மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ளது. அமரர் தமிழ்வாணன் என்பால் கொண்டிருந்த உண்மையான அன்பிற்கும் பாசத்திற்கும் ஓர் அடையாளச் சின்னமாகவே இந்நூல் திகழும். கதைக்கொத்தின் பெயர்: ‘மகாத்மா காந்திக்கு ஜே!’– நவரசங்கள் சிந்துபாடும் அருமையான சிறு கதைகள். கதைகளை வெளியிட்ட இதழாசிரியர்கள் என் அன்பிற்கு உரியவர்கள் அல்லவா?