பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

55


அதுவும் அவன் டிராயிங் வரைந்த யானைக்குட்டியை அதே சமயத்தில் எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. திருநீற்றுப்பட்டைகளின் நடுவே சந்தனப் பொட்டு திகழ்ந்தது. உச்சியில் நாலைந்து மயிரிழைகள். விசிறிக்காற்றில் அவை பறந்தன. -

“தம்பி, எங்கேருந்து வந்தே?”

“வடக்கேயிருந்துங்க!”

“அடடே, வடக்கேயிருந்தா?...”

“ம்!”

“சீனாக்காரன் எப்படி இருக்கான்?”

“அவன்தான் நம்ப மூஞ்சியிலே கரியைப் பூச நெனைச்சு, இப்ப தம் மூஞ்சியிலேயே கரியைப் பூசிக்கிட்டு, ஒட்டம் பிடிக்கத் தலைப்பட்டிட்டானே!...அந்தச் சீனாக்காரனுங்க பட்ட கஷ்டங்களை இப்ப நெனைச்சாலும் எனக்கு ரொம்பக் குஷியாயிருக்குதுங்க!”

வெகு மிடுக்குடனும் கம்பீரத்துடனும் பேசினான். “நான் வடக்கே லடாக் பகுதியிலே இருந்தவரைக்கும் ஒரு சீனன் மூச்சுக் காட்ட வேணுமே!... நம்ப மண்ணிலே ஒரு துளி எடுக்கிறதுக்கு அவன் யாருங்க?” மேஜையில் ஓங்கிக் குத்தினான்.

இரண்டு பில்கள் அவனுக்குப் பயந்துகொண்டு ஓடினவோ?-அவனா விட்டுவிடுபவன்?

“பலே பாண்டியா!” என்ற குரல் கேட்டுத் திரும்பினான் உமைபாலன்.

நேற்று கல்லாவில் காட்சியளித்த இளைஞன் நின்றான். முகத்தில் சிரிப்பு. கண்களிலே கனிவு, “உன் மாதிரிச் சிறுவர்களைத்தான் நம் நேருஜி எப்போதுமே நேசிப்பார். நேருஜி இருக்கும்வரை இந்தச் சீனன் நம் பக்கம் தலைவைத்துக்கூட