பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

மாஸ்டர் உமைபாலன்


விரல் நுனியில் சுறுசுறுப்பு இருந்ததே!... இல்லாவிட்டால் இவனைக் கிட்டங்கிப் பொறுப்புக்கு வைத்திருப்பார்களா?

“பாலா!”

“என்னப்பா, ராஜ்?”

“இன்னிக்கு என்ன ப்ரோக்ராம்?”

“ப்ரோக்ராமா?....நாம் என்ன பெரிய மனிதர்களா, நாளைக்கு ஒரு நிகழ்ச்சியும் வேளைக்கொரு விழாவும் நமக்காகக் காத்திருக்க!...”

“ப்பூ. இவ்வளவுதானா நீ?... என்னைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது போலிருக்குது ம்..”

“ஊஹும், தெரியாது”

“சரி, சரி..இன்னிக்கு லீவு. அதாவது ஒனக்குத் தெரியுமில்லையா?”

“ஓ, தெரியுமே”

“அதாகப்பட்டது, இன்றைக்கு நமக்கு சம்பளத்தோடு ஒருநாள் சட்டப்படி லீவு என்பது உனக்குத் தெரியும்!”

“ம்!”

“அப்படியென்றால், இன்று நமக்கு லீவு. அதாவது, நம் உழைப்புக்கு விடுமுறை. இல்லையா, பிரதர்?”

“வாஸ்தவம்!”

“இதுக்கு முந்தி உழைச்சதுக்காகவும் இதுக்குப் பிந்தி உழைக்க வேண்டியதுக்காகவும் நாம, நம்ம உடம்பைத் தயார்ப்படுத்துறதுக்காகக் கொடுக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பம் இன்னிக்கு! ”

“மெய்தான்!”

உமைபாலன் சிரிப்பைக் காட்டிக்கொள்ளத் தவறவில்லை.

“ஆகவே...”

“ஆகவே...இன்றைக்கு நம்ம இஷ்டப்படி ஜாலியாக இருக்க வேணும் என்ன, பாலா?”