பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ᏮᏮ

மாஸ்டர் உமைபாலன்



“வைரக் கடுக்கன் அறுபது காசு!” என்ற குரல் உள்ளேயிருந்து கேட்டது.

குரல் ஈந்தவன் மாஸ்டர் மணி.

ரொம்ப துடி!

இல்லையென்றால் புளித்துப்போன ஒரு பழைய ஹாஸ்யத்தை இத்தனை தைரியமாகச் சொல்லி ஒப்பிடக்கூடுமா?

ஹோட்டல் அதிபர் வைரக்கடுக்கனை எடை போட்டாரே, அதைப் போட்டிருந்த நபரை எடை போட்டாரோ?....அவர் கொடுத்த காசுகளை எண்ணிப் பெட்டியில் போட்டுக்கொண்டார். பிறகு, காற்றில் புறம் மாறிவிட்ட அந்த அட்டையை வாகாய்த் திருப்பி விட்டார்.

அதில் :

“இன்று முதல் சாப்பாடு ஆரம்பம்!” என்ற அறிவிப்பு இருந்தது. அளவுச் சாப்பாடு, எடுப்புச் சாப்பாடு, முழுச் சாப்பாடு, டிக்கட் சாப்பாடு என்ற பாகுபாடுகளின் விலை விவரங்களும் இருந்தன.

அது தருணம், முதலாளி கூப்பிட்டார்: “டேய் பாலா!”

உமைபாலன், பாலாவாக வடிவம் பெற்று ஓடி வந்தான். கையில் துடைக்கும் நீலத் துணி காட்சியளித்தது. பணிவுடன் நின்றான்.

“எங்கேடா ஜெயராஜ்!”

அவன் உள்ளே சென்றான். “பாலா, நம்ம ராஜ், சர்பத் சாப்பிடக் கொல்லைப் பக்கமாய்ப்போயிருக்கான், நீ கண்டுக்காதே, பெரிய பணக்காரப்பிள்ளை அவன். அவன் தயவு நமக்கு எப்பவும்