பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

5


அந்த நாய்க்குட்டி

எங்கே?


1

ஹாலிவுட் நட்சத்திரம் ஜிப்பி தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு வருகை தந்திருந்ததல்லவா? அதைப் பற்றி அன்றைய தினசரியில் செய்தி வெளியாகியிருந்தது.அந்த மனிதக் குரங்கை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான் பூபாலன். அவனுக்கு வாயெல்லாம் பல்லாகிவிட்டது.

சிரிப்பு அடங்கியது. அப்பொழுது அவனுடைய சிறுகுடலைப் பெருங்குடல் கவ்வியது, ஓடினான்.

மாம்பலம், ஜானகிராமப் பிள்ளைத் தெரு வீட்டு எண் இரண்டு.

“அம்மா, பசிக்குதே, அம்மா ஏம்மா இப்படிப் பசிக்குது?” என்று கேட்டான் பூபாலன்.

“உனக்கு பசிக்குதுன்னா அரை நாழிப் பொழுதிலே சோறு சமைச்சுப் போடுறேன். ஏன் பசிக்குதுங்கறதுக்கு உன் வயிற்றைக் கேட்டுத்தான் பதில் தெரிஞ்சுக் கோணும். நாம்ப ஏழைங்க பாரு நமக்கும் பசிக்கும் மட்டும்தான் ரொம்பச் சொந்தம்” என்றாள் பூபாலனின் தாய் அஞ்சலை.

“இன்னிக்கு நான் ஸ்கூலுக்குப் போகலேம்மா”

“ஏண்டா ?”

“ஏண்டாவா? அம்மாவுக்குக் கோபத்தைப் பாரு கோபத்தை..! அந்தக் காலத்திலே எல்லாப் பெரிய மனிதர்களும் சின்ன வயசிலே அடிக்கடி பள்ளிக்கூடத்துக்கு டிமிக்கி அடிச்சவங்கதானாம். அது-