பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பூவை எஸ். ஆறுமுகம்

77



வில்லை என்பதையும் தன் சேக்காளிகள் மூலம் புரிந்து கொண்டான்.

கைக்குட்டையில் முகத்தைப் புதைத்த வண்ணம் அப்படியே நின்றிருந்தார் காரைக்கால் ஆசாமி.

உமைபாலனோ அங்கிருந்து நகர்ந்துவிட்டான், கிராப்பை ஒதுக்கியபடி !

இந்தப் புதிர்க் குழப்பத்திற்கு ஏற்ற நேரம் இதுவல்லவென்றும், இப்படியே இந்நிலை நீடித்தால், ‘பிஸினஸ்’ கெட்டுவிடுமென்றும் அறிந்துணர்ந்த முதலாளியும் அவர் பிள்ளையும், இரவு கடை அடைக்கும் நேரத்துக்கு வரும்படியும் காரைக்கால் அன்பரிடம் சொல்லி அனுப்பினார்கள்.

உடம்பு சரியில்லையென்று அரை நாள் லீவு வாங்கிக் கொண்டு போனான் ஜெயராஜ்.

காலம் கரைந்தது.

இரவு மணி ஒன்பது.

விளக்குகள் பிரகாசமாக எரிந்தன.

உமைபாலனை அனுப்பிவிட்டு, கோபு கல்லாவில் அமர்ந்தான். மேஜை இழுப்பைத் திறந்து சில்லறைகளையும் ரூபாய்த் தாள்களையும் இனம் பகுத்து மேஜையின் மீது வைத்தான். அருகில் உட்கார்ந்திருந்த ‘கனபாடி’ பொடிமட்டையைப் பிரித்து மூக்கின் துவாரங்களிலே பொடியைச் செலுத்திவிட்டு, குத்துக் கம்பியில் செருகப்பட்டிருந்த பில்களையும் சாப்பாட்டு டிக்கட்டுகளையும் எண்ணிக் கணக்கிட்டார்.

அப்போது, வாசல் பெட்டிக்கடையில் ஏதோ கசமுசவென்று பேச்சுக் கேட்டது. தம் கடையில் அலுவல் பார்க்கும் ஜெயராஜ் என்பவனும் பெரிய இடத்துப் பிள்ளை என்ற அங்கு பேச்சு அடிபட்டது. “டே அம்பி கேட்டியாடா சங்கதியை! நம்ம ஓட்டல் பேர் பேப்பரிலே வரப்போகுதுடா” என்று ‘குஷி’ யுடன் பேசி, ஜெயராஜ் பற்றிக் காதில் விழுந்ததையும் கொட்டினார். மத்தியானம் நடந்த கூத்தின்போது, டிக்கட் விற்ற பணத்தை ஜெயராஜ் தம்மிடம் கொடுத்ததையும் அவர் நினைத்தார்.