பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

அந்த நாய்க்குட்டி எங்கே?


போல நான் இப்போ ஸ்கூலுக்கு மட்டம் போட்டா, அப்பாலே பெரிய மனிதனாகிப் போயிடுவேனாக்கும்” என்றான் சிறுவன், சிரித்தபடி.

“போடா, மண்டு!” என்று கடிந்தாள் தாய்.

பூபாலனின் வயிற்றுக்குள் சோற்று உருண்டைகள் இருபது போனதும்தான் தெம்பு வந்தது.

அப்பொழுது அவன் தந்தை முருகேசன் வந்தான்,

“அப்பா, என்னை அம்மா மண்டுங்கறாங்களே? நான் முட்டாளாயிருந்தா வருஷத்துக்கு வருஷம் இப்படி பாஸாவேனா?... என் சுயகெளரவத்தை யார் குறைச்சலா மதிச்சாலும் எனக்கு நெஞ்சு பொறுக்காது” என்றான்.

“பலே, மகனே! முதலிலே நீ ஒழுங்காகப் பள்ளிக் கூடத்துக்கு போ. அப்புறம் பெரிய மனிதனாக ஆகலாம். எனக்கு உடம்புக்கு முடியலே. அதாலே எங்க கண்ணாடித் தொழிற்சாலையிலே லீவு சொல்லி வந்திட்டேன்.” என்று சொன்னான் முருகேசன்.

புத்தகப் பையுடன் பூபாலன் ஸ்கூலுக்குப் புறப்பட்டான். சுவரில் பதித்திருந்த உடைந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டு, கையால் தலையைக் கோதி விட்டுக் கொண்டான். புறப்பட்டு விட்டான்.

பூபாலன் ராஜாவுக்கு பராக் !...பராக்!

கோடம்பாக்கம் பெரியசாலையில் திரும்பினான் பூபாலன். அங்கே வ.உ.சி-யின் சிலை காணப்பட்டது. கப்பல் ஒட்டிய தமிழனுக்குச் சிரம் வணங்கிக் கரங்கூப்பி வணக்கம் தெரிவித்தான். அவன் தலையை நிமிர்த்தியபோது “கா.கூ. க்கூ” என்று பயங்கரமான தீனக் குரல் கேட்டது. நாற்புறமும் திரும்பிப் பார்த்தான். பூங்காவின் வடக்குக் கோடியில் காரின் அடியில் நசுக்கப்பட்டு உயிர் விட்ட ஒரு நாயைக் கண்டான். உடல் நடுங்கியது. அவனுக்கு அழுகை பீறிட்டது. அப்பொழுது அங்கு ஓர் அதிசயத்-