பக்கம்:அனிச்ச மலர்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

அனிச்ச மலர்



"உன்னை ஒண்ணும் நான் கடிச்சு முழுங்கிட மாட்டேன் சுமதி! ஏறிக்கோ, ஹாஸ்டல் வாசல்லே டிராப் பண்ணிட்டு அப்புறம் நாங்க போறோம்” என்றாள் மேரி,


சுமதி மேலும் தயங்கவே அந்தக் காரின் உரிமையாளரே, "ஏறிக்கோம்மா!.. உன்னை ஹாஸ்டல்லே டிராப் பண்றேன், பயப்படாதே" என்று கெஞ்சினார்.


சுமதி மேலும் அவர்களிடம் மன்றாடிக் கொண்டு நிற்காமல், காரில் ஏறி முன் ஸீட்டில் மேரியின் அருகே அமராமல் பின் ஸீட்டில் தனியே அமர்ந்து கொண்டாள். கார் ஒசையின்றி வழுக்கிக் கொண்டு விரைந்தது.

7


தியேட்டர் வாசலில் புறப்பட்ட கார் அங்கிருந்து நேரே 'ஸ்பென்ஸர்' காம்பவுண்டுக்குள் புகுந்து நின்றது. அதுவரை மேரியும் அந்தக் காரைச் செலுத்தி வந்த வர்த்த்கப் பிரமுகரும் தங்களுக்குள் ஆங்கிலத்தில் ஏதேதோ பேசிக்கொண்டு வந்தார்கள். சுமதியை அவர்கள் பின் ஸீட்டில் தனியே விட்டுவிட்டதனால், அவளைத் தங்கள் உரையாடலுக்கு இழுக்கவும் இல்லை. அவளும், அதில் கவனம் செலுத்தத் தயாராக இல்லை. ஏதோ அருவருப்படைந்த மனநிலையில் அப்போது இருந்தாள் சுமதி. அவர்கள் தன்னோடு பேசாமல் தன்னைப் பின் ஸீட்டில் தனியே விட்டுவிட்டதே அப்போது அவளுக்கு இதமாகவும் ஆறுதலாகவும் சுலபமாகவும்கூட இருந்தது.

ஸ்பென்ஸரில் போய்க் கார் நின்றதும், "நீங்க வண்டிலே இருங்க. பெர்மிட்டை எங்கிட்டக் குடுங்க. நான் போய் வாங்கிட்டு வந்துடறேன்” என்றாள் மேரி.


"நோ நோ, நீ இங்கேயே இரு. "ஐ வில் கலெக்ட் மை ஸெல்ஃப்" என்று அந்தப் பிரமுகரே இறங்கிப் போனார்.


'பெர்மிட் ஹோல்டர்ஸ் கவுண்ட்டர்' என்ற பகுதியை நோக்கி அவர் நடப்ப்தைக் காரிலிருந்தபடியே சுமதி கவனித்தாள். மேரி காரில் முன்புறம் அமர்ந்திருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/50&oldid=1146877" இலிருந்து மீள்விக்கப்பட்டது