பக்கம்:அனிச்ச மலர்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

அனிச்ச மலர்


கேட்பதற்கு வாயில் வந்த வார்த்தைகளைச் சிறிதும் தணிக்கை செய்து பேசத் தோன்றாமல் அப்படியே மனதில் தோன்றியபடி கேட்டிருந்தாள் விமலா,

சுமதிக்கு அந்தக் கேள்வி என்னவோ போலிருந்தது. இத்தனை பெரிய வரும்படியா? என்ற அவள் வார்த்தை கள் மிகவும் குத்தலாக அவளுக்குத் தோன்றின. ஆனால் அதற்காக விமலாவிடம் அவள் எரிந்து விழவில்லை. பொறுத்துக் கொண்டாள்.

மறுநாள் காலையிலும் விமலாவிடம் சொல்லி அவ ளையும் அழைத்துக் கொண்டு வெளியே போவது போல் தான் வெளியேற முடிந்திருந்தது. முதல்நாள் சொல்லியி ருந்தபடி சரியாக எட்டேகால் மணிக்கு ஹாஸ்டல் வாசலில் இருந்த பஸ் ஸ்டாண்டிற்குக் கார் வந்துவிட்டது. கல்லூரிக்கு அன்று விடுமுறை நாள்தான். மாலையில் நேரங்கழித்து திரும்பினால்கூடப் பரவாயில்லை. ஆனால் சொல்லியிருந்தபடி காரில் மேரி வரவில்லை. நேரேயே தயாரிப்பாளரோடு போய் விட்டதாக டிரைவர் கூறினான். -

பூந்தமல்லி ஹைரோடில் ஒரு பெரிய ஹோட்டல் வாசலில் டிரைவர் காரை நிறுத்தி, "கொஞ்சம் இருங் கம்மா! அவுட்டோருக்கான டிஃபன், காபி எல்லாத் துக்கும் இங்கேதான் சொல்லியிருக்காங்க. டிக்கியிலே ஏத்திக்கிட்டு வந்துடறேன்” என்றான்.

சுமதி காரிலேயே உட்கார்ந்திருந்தாள். அரை மணி தாமதாமாயிற்று. எல்லாம் ஏற்றி முடிந்ததும் கார் மறுபடி புறப்பட்டது.

படப்பிடிப்பிற்குக் குறிப்பிட்டிருந்த லொகேஷனுக் குப் போனதும் முதலிலேயே போய்த் தயாரிப்பாளர், மேரி மற்ற நடிகர் நடிகைகள், எல்லாரும் அங்கே தயாராகக் காத்திருப்பதைப் பார்த்தாள் சுமதி.

"ரொம்பப் பெரிய வி.ஐ.பி. நட்சத்திரம்தான் கால் ஷட்லே கடைசியா வந்து சேரும். இன்னிக்கு நம்ம சுமதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/94&oldid=1146907" இலிருந்து மீள்விக்கப்பட்டது