பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனுபவக் களஞ்சியம்


நல்ல பாடம்

ஒரு குடும்பத்தின் தலைவி படித்தவளாக இருந்தால், அந்தக் குடும்பத்தில் ஆயிரம் ஆசிரியைகள் இருப்பதற்கு சமம் என்பார்கள். அது போலவே ஒரு குடும்பத்தின் தலைவி பலமும் சக்தியும், நோயில்லாத தேகமும் உடையவளாக இருந்தால், அந்தக் குடும்பத்தில் ஆயிரம் டாக்டர்கள் இருப்பதற்கு சமம் என்பதை அனுபவம் நன்றாகவே கூறுகிறது. ஆனால், அந்தப் பாடத்தைக் கேட்கத்தான் ஆளில்லை.

Ο O O

பண்பாட்டு மேடை

உணர்ச்சி வயப்படுகின்ற நேரத்தில் ஆவேசத்தின் எழுச்சி ஆட்சி புரிகின்ற சமயத்தில், தன்னை சுற்றிலும் உள்ளவர்கள் மற்றவர்களை விட தன்னையே அதிகம் மதிக்க வேண்டும் என்ற வேகத்தில் செயல்படுகின்ற சூழ்நிலையில், எதிர்த்து