14
நாட்டின் அழகு
வயல்கள், காடுகள், ஆறுகள் மலைகள், கட்டிடங்கள், தொழிற்சாலைகள் எல்லாம் ஒரு நாட்டுக்கு அழகையும் புகழையும் சேர்ப்பதாகும். ஆனால் ஒருநாட்டுக்கு அழகு என்பது, அந்தநாட்டு இளைஞர்களின் உடல் பலமும் வளமும் தான்.
Ο O O
வீடும் தேகமும்
மலைப்புறங்களில் வீடுகட்ட விரும்பினால் கெட்டியான தரையில்தான் கட்ட முடியும். பொத பொத வென்று போகிற மணற்பாங்கிலே வீடு கட்ட முடியாது. அதுபோலவே, வலிமையான தேகத்தினால் தான் வலிமையான காரியங்களையும் எளிதாகச் சாதிக்க முடியும். வாழ்க்கையில் நோயுள்ள உடம்புள்ளவர்களால் என்ன செய்ய முடியும்?
Ο O O
அழகுக் கலை
வேண்டாத முடியை தேவையில்லாத இடத்தில் மழித்துவிட்டு அழகு செய்து கொள்வதுபோல, உடம்பில் ஊறும் வேகக் காதலையும் சற்று விவேகமாக ஒதுக்கிவிட்டால் உடம்பையும் அழகாகப் பார்த்துக் கொள்ளலாம். ஒய்யாரமாகவும் வாழலாம் ! யாரால் இதைச் செய்ய முடிகிறது?
Ο O O