பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

காடு, மேடு, பள்ளம், சகதி, தண்ணீர் என்று எந்த பாதையையும் அது விட்டு வைப்பதில்லை. தயங்கிக்கொண்டு போகாமல் இருப்பதில்லை. இரவு பகல் பாராது. இடம் காலம் இல்லாது உழைக்கின்ற லாரி போல், உடலும் மனமும் நமக்கு வேண்டும். அதுதான் ஒப்பற்ற வாழ்க்கையாகும். ஆனால் அதி வேகமும் அற்பத்தனமான வேகமும் கொண்டு அடிக்கடி கவிழ்ந்து போகின்ற லாரிகளாக நாம் போய்விடக் கூடாது. கச்சிதமான உழைப்பு, கட்டுப்பாடான வேகம்-கலங்காத மனோதிடம் - கவலைப்படாத செயலாற்றல் இப்படித்தான் நாம் வாழ முயல வேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு இறைவனின் பரிபூரண ஆசிகளும் எப்பொழுதும் தொடர்ந்து வந்து நிலைத்து, வாழ்த்திக் கொண்டே வரும்.

Ο O O

வலிமையே வாழ்வு

நேரம் காலம் பாராமல் உழைப்பவர்களால் தான், நேர்மையாக வாழ முடியும். ஏனென்றால். அவர்களுக்கு ‘உழைப்பு உயர்த்தும்’ என்ற நம்பிக்கை இருக்கிறது. அதிகமான உழைப்பு உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. ஆனந்தமான உறக்கத்தைக் கொடுக்கிறது. நல்ல வலிமையைக் கொடுக்கிறது. வலிமையின் துணையால் வாழ்வில் உயரமுடியும் என்று நம்புகிற எவனும் வழி மாறிப் போகமாட்டான். இதுதான்